Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 20 நவம்பர், 2021

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் அனைத்தின் விற்பனை சரிவு!! இருப்பினும் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா!

கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் உலகளவில் நிலவிவரும் குறை கடத்திகளுக்கான பற்றாக்குறையினால் சமீப மாதங்களாக அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கான விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இந்த பிரச்சனைகளில் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி ஸ்கூட்டர்களும் உட்படுகின்றன.

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர்கள் மட்டுமே மொத்தமாக 4,36,667 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதுவே 2020 அக்டோபரில் டாப்-10 ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 5,32,435 யூனிட்களாக இருந்தது. இந்த வகையில் டாப்-10 ஸ்கூட்டர்களின் விற்பனை 18 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த டாப்-10 ஸ்கூட்டர்களில் வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா தான் முதலிடத்தில் உள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் மட்டும் 1,96,699 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,39,570 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 18% குறைந்துள்ளது.

ஆக்டிவாவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் மாடல் 72,161 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டரின் விற்பனை பெரிய அளவில் குறையவில்லை. வெறும் 2.69 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. ஏனெனில் 2020 அக்டோபரில் கிட்டத்தட்ட கடந்த மாதத்திற்கு இணையாக 74,159 யூனிட் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஹோண்டா ஆக்டிவாவை போல் டிவிஎஸ் ஜூபிட்டரும் 110சிசி மற்றும் 125சிசி-களில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாவது இடத்தை சுஸுகி ஆக்ஸஸ் 46,450 யூனிட்கள் விற்பனை உடன் தக்க வைத்து கொண்டுள்ளது. 2020 அக்டோபரில் 52,441 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக