Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 20 நவம்பர், 2021

அதுல தான் சியோமி ஸ்பெஷல்லே- புதுரக சிப்செட் உடன் சியோமி 12 அல்ட்ரா: தாராளமா வெயிட் பண்ணலாம்!

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

சியோமி 12 அல்ட்ரா சாதனத்தின் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி, 50 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் என தெரிவிக்கிறது. கசிவுத் தகவலின்படி சியோமி 12 சாதனத்தை தவிர சியோமி 12 அல்ட்ரா மேம்படுத்தப்பட்ட பதிப்பிலும் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் அடுத்த உயர்நிலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. அதேபோல் புதிய கசிவு ஆனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் வரவிருக்கும் ஸ்னாப்டிராகந் 8 ஜென் 1 அல்லது ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. சியோமி தற்போதுவரை இந்த சாதனம் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான கசிவு இரண்டு குறியீட்டு பெயர்களை கொண்டிருக்கிறது.

சியோமி 12-ன் விவரங்கள்

சியோமி 12-ன் விவரங்கள் முதன்முதலில் ஆகஸ்ட் மாதத்தில் கசிந்தது. இந்த நிலையில் சியோமி யூஐ வலைதள அறிக்கைப்படி, சியோமி நிறுவனம் சியோமி 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில் லோகி மற்றும் தோர் என்ற இரண்டு குறியீட்டு பெயரில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் வெளியாகும்

சியோமி 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகிய இரண்டு மாடலும் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது ஸ்னாப்டிராகன் 898 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது 2022 ஆம் ஆண்டில் வெளியாகும் முதன்மை ரக சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 அல்ட்ரா குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்எஸ் சென்சார் பொருத்தப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 அல்ட்ரா 2 எக்ஸ் ஜூம் கொண்ட 48 மெகாபிக்சல் கேமரா, 5 எக்ஸ் ஜூம் கொண்ட 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் 10 எக்ஸ் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தை பொறுத்தவரையில் இதில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

தகவலை உறுதிப்படுத்தாத சியோமி

அறிக்கையில் வெளியான தகவலின்படி, சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது சீனாவின் பிரத்யேக சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 ஆம் ஆண்டில் காலாண்டில் வரக்கூடும் என கூறப்படுகிறது. சியோமி தற்போது வரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதி

வெளிவந்த தகவலின்படி, சியோமி 12 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 12 ஸ்மார்ட்போன்.

50எம்பி கேமரா

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சியோமி 12 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சியோமி 12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

கேமிங் உட்பட பல்வேறு வசதிகள்

சியோமி 12 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றுகூறப்படுகிறது. பின்பு கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக