Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 20 நவம்பர், 2021

BSNL அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டங்கள்: Disney+ Hotstar நன்மை கூட இருக்கு- என்ஜாய் பண்ணுங்க.!

BSNL பாரத் ஃபைபர் ரூ. 949 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் சிறப்பு அம்சம், தொகுக்கப்பட்ட ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகள் ஆகும். புதிய சூப்பர்ஸ்டார் பிரீமியம் - II திட்டங்கள் BSNL சினிமா பிளஸ் உடன் குறைந்த விலையில் வருகிறது. சமீபத்திய டெலிகாம் அறிக்கையின்படி, பாரத் ஃபைபர் ரூ. 949 திட்டம் மற்றும் சூப்பர்ஸ்டார் பிரீமியம்-1 திட்டம் ரூ. 749 ஆகிய திட்டங்கள் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. இந்த திட்டங்களின் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

BSNL பாரத் ஃபைபர் ரூ. 949 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

சமீபத்திய டெலிகாம் அறிக்கையின்படி, பாரத் ஃபைபர் ரூ. 949 திட்டமானது பயனர்களுக்கு 2000 ஜிபி மாதாந்திர டேட்டா நன்மையை 150 எம்பிபிஎஸ் வேகத்துடன் வழங்குகிறது. இந்த திட்ட நன்மையோடு, இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு BSNL Cinema Plus ஆனது SonyLIV Premium, ZEE5 Premium, Voot Select, Yupp TV மற்றும் பல போன்ற பல OTT இயங்குதளங்களுக்கான சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் விலை உங்கள் பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். இதை விடக் குறைவான விலையில், ஏறக்குறைய இதே நன்மைகள் கிடைக்கும் திட்டமும் BSNL இடம் உள்ளது.

BSNL பாரத் ஃபைபர் ரூ. 749 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

பட்ஜெட் விலையில் ஒரு சிறந்த பிராட்பேண்ட் திட்டத்தைத் தேடும் நபர்களுக்கு, BSNL வழங்கும் இந்த ரூ. 749 திட்டம் ஒரு அருமையான தேர்வாகும். BSNL இடமிருந்து கிடைக்கும் மற்றொரு சூப்பர்ஸ்டார் பிரீமியம்-1 திட்டம் தான் இந்த ரூ.749 விலை திட்டம். இந்த ரூ. 749 திட்டமானது மாதத்திற்கு 1000 ஜிபி டேட்டா நன்மையை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக BSNL சினிமா பிளஸ் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. தெரியாதவர்களுக்கு, BSNL Cinema Plus ஆனது SonyLIV Premium, ZEE5 Premium, Voot Select, Yupp TV மற்றும் பல போன்ற பல OTT இயங்குதளங்களுக்கான சந்தாவுடன் வருகிறது.

BSNL மற்ற பிராட்பேண்ட் திட்டங்கள் OTT நன்மைகளுடன் வருகின்றதா?

BSNL Bharat Fiber வழங்கும் மேலும் இரண்டு பிராட்பேண்ட் திட்டங்கள் OTT நன்மைகளுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களின் விலை ரூ. 999 மற்றும் ரூ.1499 ஆக இருக்கிறது. ரூ. 999 திட்டமானது பயனர்களுக்கு 200 Mbps வேகத்தில் 3.3TB வரை மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் இலவச நிலையான வரி இணைப்புடன் வருகிறது. ரூ. 999 திட்டத்தில் வழங்கப்படும் OTT நன்மை ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் Disney+ Hotstar பிரீமியத்தின் நன்மை ஆகும்.

BSNL பாரத் ஃபைபர் ரூ. 1499 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

BSNL வழங்கும் மிகவும் விலையுயர்ந்த மாதாந்திர ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமான ரூ. 1499 திட்டமானது, 300 Mbps வேகத்தில் 4TB மாதாந்திர டேட்டா நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் இலவச நிலையான வரி குரல் அழைப்பு இணைப்பையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வழங்கப்படும் OTT நன்மையும் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் நன்மையோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. BSNL நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT நன்மையைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது என்பது பெரும்பாலானோர் அறிந்திடாத தகவலாக இருக்கிறது.

BSNL OTT நன்மைகளுடன் வழங்கும் திட்டங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா?

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து OTT நன்மைகளுடன் வரும் வேறு எந்தவொரு ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களும் BSNL இடமிருந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் மட்டுமே பயனர்களுக்குத் தேவையான OTT நன்மைகளுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதே போன்ற திட்டங்களை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டெலிகாம் பயனர்கள் OTT நன்மைகளுடன் திட்டங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

BSNL இன் இந்த புதிய திட்டங்கள் வரவேற்கப்படுமா?

ஆகையால், BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த OTT நன்மைகள் கிடைக்கும் திட்டங்கள் நிச்சமாகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், BSNL பயனர்களால் இந்த திட்டங்கள் அதிகம் வரவேற்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இன்னும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்?

BSNL இந்த திட்டங்களைப் பயனர்களுக்கு எப்போது வழங்கத் தொடங்கும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக மிக விரைவில் இது பயனர்களுக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக