>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 27 நவம்பர், 2021

    இதெல்லாம் தேவையே இல்லீங்க... கார்களில் அனாவசியமாக வழங்கப்படும் வசதிகள்... என்னென்ன தெரியுமா?

    கார்களில் தேவையே இல்லாமல் வழங்கப்படும் வசதிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

    முந்தைய கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் கார்கள் தற்போது அட்வான்ஸாக மாறி வருகின்றன. கார்களில் தற்போது பல்வேறு அதிநவீன வசதிகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வசதிகள் பயணிகளுக்கும், ஓட்டுனருக்கும் மிகப்பெரிய அளவில் உதவி செய்கின்றன. அதில் யாருக்கும் எவ்விதமான சந்தேகமும் இல்லவே இல்லை.

    ஆனால் கார்களில் தேவையே இல்லாமலும் ஒரு சில வசதிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வசதிகளை வழங்காமல் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் காரின் விலையாவது ஓரளவிற்கு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    போலியான பிளாஸ்டிக் ரூஃப் ரெயில்கள்

    ரூஃப் ரெயில்கள் எதற்காக பயன்படுகின்றன? என்பது நமக்கு தெரியும். காரின் மேற்கூரையில் அதிக லக்கேஜை வைத்து எடுத்து செல்வதற்கு ரூஃப் ரெயில்கள் பயன்படுகின்றன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் கார்களில் போலியான பிளாஸ்டிக் ரூஃப் ரெயில்களை வழங்குகின்றன. அவை வெறுமனே காரை கம்பீரமாக காட்டுவதற்காக மட்டும் கொடுக்கப்படுகின்றன. இந்த போலியான ரூஃப் ரெயில்கள் எதற்கும் பயன்படாது.

    போலியான எக்ஸாஸ்ட் பைப்கள்

    கார்களின் அழகை கூட்டுவதற்காக மட்டுமே போலியான எக்ஸாஸ்ட் பைப்கள் வழங்கப்படுகின்றன. அவ்வளவுதான். இதனால் வேறு எந்த உபயோகமும் இல்லை. வெறுமனே அழகான தோற்றத்திற்காக மட்டும் கார்களை உற்பத்தி செய்வதை கார் நிறுவனங்கள் தவிர்ப்பது நல்லது. அந்தளவிற்கு பவரை உற்பத்தி செய்ய முடியாதபோது, காரில் ஏன் போலியான எக்ஸாஸ்ட் பைப்களை வழங்க வேண்டும்?

    நிலையான ஹெட்ரெஸ்ட்கள் உடன் கூடிய இருக்கைகள்

    பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது கார் நிறுவனங்களின் தலையாய கடமை. இதற்காக கார் நிறுவனங்கள் மெனக்கெடுகின்றன. இதன் ஒரு பகுதியாக நிலையான ஹெட்ரெஸ்ட்கள் உடன் கூடிய இருக்கைகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் வழங்குகின்றன. இன்றைய கால கட்டத்தில் விலை குறைவான கார்களில் இந்த வசதியை அதிகம் காண முடிகிறது.

    ஆனால் நிலையான ஹெட்ரெஸ்ட்கள் உடன் கூடிய இருக்கைகள் பயணிகளுக்கு சௌகரியத்தை வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. நிலையான ஹெட்ரெஸ்ட்களுக்கு பதிலாக அட்ஜெஸ்ட் செய்ய கூடிய ஹெட்ரெஸ்ட்களை கார் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கலாம். இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.

    காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் 3வது வரிசை இருக்கைகள்

    காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் 3வது வரிசை இருக்கைகளை வழங்குவது, பீட்சாவில் பைனாப்பிளை சேர்ப்பது போன்றது. இது தேவையே இல்லாத ஒன்று. பொதுவாக மூன்றாவது வரிசை இருக்கைகளில் லெக்ரூம் அவ்வளவாக இருக்காது. எனவே குறைவான உயரம் கொண்டவர்களுக்குதான் இது ஏற்றது. குறைவான உயரம் கொண்ட 2 பேருக்காக 3வது வரிசை இருக்கைகளை வழங்குவதால், காரின் ஒட்டுமொத்த இடவசதி குறையும்.

    பியானோ வண்ண பேனல்கள்

    பியானோ வண்ண பேனல்களில் ஸ்கிராட் ஏற்படாதா? இல்லை. அழுக்கு படியாதா? இல்லை. கை ரேகை படியாதா? இல்லை. பிறகு எதற்கு கார்களில் இந்த பேனல்களை வழங்க வேண்டும். பியானோ வண்ண பேனல்களை கொண்ட கார்களை நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். எனவே இதற்கு பதிலாக மேட் ஃபினிஷ் பேனல்களை வழங்கலாம்.
    ,

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக