Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 நவம்பர், 2021

FASTag மூலம் பேமெண்ட்.. ஐடிஎப்சி - ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் புதிய சேவை அறிமுகம்..!

இந்தியாவில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாகியுள்ள வேளையில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து எரிபொருளுக்கான தொகையை பாஸ்டேக் மூலம் செலுத்தும் சேவையைக் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் இனி ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்-ன் பாஸ்டேக் பெற்று உள்ளவர்கள் பெட்ரோல், டீசலுக்கான தொகையை இனி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகளில் பாஸ்டேக் வாயிலாகவே செலுத்த முடியும்.

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் போக்குவரத்து சார்ந்த அனைத்து பேமெண்ட் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் எளிதாகவும், மேம்பட்ட முறையிலும் அளிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் வாயிலாக ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் தற்போது வெளியிட்டுள்ள 50 லட்சம் பாஸ்டேக்-ஐ விநியோகம் செய்துள்ளது. இதில் 20 லட்சம் பாஸ்டேக் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

தற்போது ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து அளிக்கும் சேவையின் மூலம் ஒற்றை கார்டில் டோல் பிளாசா கட்டணமும் செலுத்த முடியும், அதேபோல் பெட்ரோல், டீசலுக்கான தொகையும் செலுத்த முடியும். இந்த சேவையை பாஸ்டேக் பயன்பாட்டைப் பெரிய அளவில் அதிகரிக்கும்.

பர்சனல் வாகனங்களுக்கு விரிவாக்கம்

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உடன் இணைந்து கடந்த ஆண்டு வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமே இந்த தேவையைக் கொடுத்த நிலையில் தற்போது பர்சனல் வாகனங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. இதுபோன்ற சேவையை முதல் முறையாக அறிமுகம் செய்ததும் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் தான் என இவ்வங்கி தரப்பு கூறுகிறது.

பாஸ்டேக் திட்டம்

இந்தியாவில் பாஸ்டேக் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை, நெடுஞ்சாலை நிர்வாக நிறுவனம் மற்றும் தேசிய பேமெண்ட் கார்ப் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து பாஸ்டேக் கட்டமைப்பை உருவாக்கி அனைத்து டோல் கட்டணத்தை வசூலித்து வருகிறது. தற்போது இந்தியாவில் தினமும் 70 லட்சம் பணப் பரிமாற்றம் பாஸ்டேக் மூலம் நடக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக