டெலிகாம்
நிறுவனங்கள் வழங்கும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது, எந்த ஒரு தொலைத்
தொடர்பு நிறுவனங்களும் வழங்கிடாத மிக மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும்.
தேவைக்கு அதிகமாக டேட்டா பெற விரும்பாத குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு
இது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. ரூ.1 ரீசார்ஜ் திட்டம்
என்பது தனியார் நிறுவனங்கள் எதுவும் தங்கள் பயனர்களுக்கு வழங்கிடாத
வசதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.ரிலையன்ஸ் ஜியோ அமைதியாக ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மொபைல் பயன்பாட்டில் தெரிந்தாலும் அதன் இணையதளத்தில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரூ.1 ப்ரீபெய்ட் பேக்கில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம்.
ரூ.1 ப்ரீபெய்ட் பேக் திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் காலவரையோடு 100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வவுச்சரை பயன்படுத்தி 10 முறை ரீசார்ஜ் செய்தால் ரூ.10 செலவாகும்., இதன் அடிப்படையில் 30 நாட்களுக்கு தினசரி 100 எம்பி என்ற அடிப்படையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ ரூ.15-க்கு 1ஜிபி 4ஜி வேக டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூ.1-க்கு 100 எம்பி டேட்டா என்றால் ரூ.10-க்கு 1ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த 100 எம்பி டேட்டா 4ஜி வேகத்தில் கிடைத்த பிறகு இதன் வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கும் முதல் ஆபரேட்டராக மாறி இருக்கிறது. டெலிகாம் வழங்கும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது நாட்டில் உள்ள எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும். தேவைக்கு அதிகமாக டேட்டா பயன்படுத்தாத குறைந்த வருமானம் கொண்டவர்கள் இது மிகவும் பேருதவியாக இருக்கும்.
மாத வரம்பில் ரீசார்ஜ் திட்டம் தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யும் போது அந்த வரம்பு டேட்டா நிறைவடைந்தால், போதுமான டேட்டா கூடுதலாக தேவைப்படும் போது இந்த ரூ.1 ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யலாம். 100 எம்பியோ அல்லது 400 எம்பி அளவிலான டேட்டாவோ தேவை என்று இருந்தால் இதை வெறும் ரூ.4 என்ற வீதத்தில் பெறலாம். தற்போது 500 எம்பி வீடியோவை பதிவிறக்கம் செய்ய விரும்பும் பட்சத்தில் அதை வெறும் ரூ.5 என்ற செலவில் பெறலாம்.
பயனர்கள் பத்து முறை ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ஒரு முறை ரூ.15 என செலுத்தி ரீசார்ஜ் செய்தால் ஒரே நேரத்தில் 1 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது பயனர் ஒவ்வொரு நாளும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் சிரமத்தை குறைக்கும். பிற தனியார் ஆபரேட்டர்கள் எதுவும் தங்கள் பயனர்களுக்கு இதுபோன்ற வசதியை வழங்குவதில்லை. இந்த திட்டத்தில் ஒரே நேரத்தில் பயனர்கள் எத்தனை முறை ரீசாரஜ் செய்யலாம் என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்தவில்லை. இது முந்தைய புதிய சலுகையாக தெரிகிறது. இந்த திட்டம் குறித்து நிறுவனம் இதுவரை எதையும் அறிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக