Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 29 டிசம்பர், 2021

போட்டி போடலாமா?- 10.5 இன்ச் டிஸ்ப்ளே, 7040 எம்ஏஎச் பேட்டரி அம்சம்: அமேசான் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8!

 சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்திய அறிமுகம் குறித்த தகவல்

சாம்சங் சமீபத்தில் பட்ஜெட் கேலக்ஸி டேப் ஏ8 2021 டேப்லெட்டை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது சாம்சங் இந்திய வாடிக்கையாளர்களுக்காக விரைவில் டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. சாம்சங் நிறுவனம் இதுவரை இந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. கேலக்ஸி டேப் ஏ8 டேப்லெட்டின் வெளியீடு அமேசானில் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளத்தில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட் தளம் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களையும் வெளியப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்திய அறிமுகம் குறித்த தகவல்

அமேசான் டீஸர் டேப்லெட்டின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. கேலக்ஸி டேப் ஏ8 2021 ஆனது சுற்றிலும் தடிமனான பெசல்களை கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் வால்யூம் கீ மற்றும் பவர் பட்டன்கள் டேப்லெட்டின் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன. அமேசானின் பட்டியல் இந்தியாவில் கேலக்ஸி டேப் ஏ8-ன் சரியான வெளியீட்டு தேதி தற்போது வரை வெளிப்படுத்தவில்லை.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அம்சங்கள்

டேப்லெட்டின் அம்சங்கள் குறித்த தகவல் முன்னதாகவே வெளி வந்தது. அமேசான் பட்டியல் இந்திய மாறுபாடு சர்வதேச மாடலை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப்லெட்டின் அம்சங்களை பொறுத்தவரை, டேப்லெட் 1920 x 1200 பிக்சல்கள் தீர்மானத்திற்கான ஆதரவுடன் 10.5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய டேப்லெட் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. இது ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1 டிபி வரை விரிவாக்கம் செய்யலாம். இமேஜிங் ஆதரவுக்கு என 5 எம்பி முன்புற கேமரா சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 8 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன்யூஐ 3.0 அவுட் ஆஃப் தி பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.

15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

அதேபோல் கேலக்ஸி டேப் ஏ8 2021 சாதனமானது 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7040 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை கொண்டுள்ளது. பிற அம்சங்களை பொறுத்தவரை டால்பி அட்மோஸ், சாம்சங் கிட் பிரிவு மற்றும் வைஃபை 5, ப்ளூடூத் 5, ஆடியோ ஜாக், யூஎஸ்பி 2.0 போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது. இது குவாட் ஸ்பீக்கர்கள் வசதியோடு வருகிறது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 ஆனது வைஃபை மற்றும் வைஃபை+ எல்டிஇ வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டிலும் இதே அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி டேப் ஏ8 வைஃபை மட்டுமே தொடங்குகிறது. இந்த சாதனம் இந்திய மதிப்புப்படி ரூ.19700 ஆக இருக்கும் எனவும் எல்டிஇ மாறுபாட்டின் இந்திய மதிப்பு விலை ரூ.24000 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ.20,000 விலைப் பிரிவில் வரலாம்

இந்த விலையை பார்க்கையில் இந்திய மாறுபாடு சுமார் ரூ.20,000 விலைப் பிரிவில் வரலாம் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் பிங்க் கோல்ட், க்ரே மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் நாட்டில் வாங்குவதற்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இது அமேசான் பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்ப்பு

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அதே விலை வரம்பில் உள்ள பிற பிராண்டுகளின் டேப்லெட்டுகளுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி டேப் ஏ8 ஆனது டேப்லெட்டின் டிஸ்ப்ளே இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை செய்யலாம் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வரும். பெரிய டிஸ்ப்ளே உடன் மகிப்பெரிய பேட்டரி மற்றும் வேகமான சார்ஜ் செய்யும் தொழில்நுட்ப அனுபவத்தை வழங்குகிறது. தென்கொரிய பிராண்ட் முதன்மையான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 தொடர் டேப்லெட்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக