
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆவணம் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ஆதார் அட்டை என்பது முக்கியமானது மற்றும் கட்டாயமானது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய அடையாள அட்டை ஆவணத்தில் மக்களின் முகம் தெளிவாக இருப்பதில்லை என்பது நீண்ட நாள் குறையாகக் கூறப்பட்டு வருகிறது.
நாட்டின் முக்கிய அடையாள அட்டையில், அந்தந்த தனிநபரின் முக அடையாளமே தெளிவாக இல்லாமல் இருப்பதும், ஆதார் அட்டையில் உள்ள முகத்தைப் பார்த்து நண்பர்கள் கிண்டல் செய்யும் விதத்திலேயே ஆதார் புகைப்படங்கள் அமைந்துள்ளது. இது ஒரு புறம் வேடிக்கை கூத்தாக இருந்தாலும், இதை நாம் சரியாக மாற்றிக்கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் முக்கிய கடமையாகும். உண்மையைச் சொல்லப் போனால், இதை ஆதார் ஆணையமே ஆரம்பத்தில் சரியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், போதிய நேரமும், சரியான புகைப்படக் கருவிகளும் வழங்கப்படாத காரணத்தினால் தெளிவான புகைப்படங்களை ஆதரில் பதிவிட முடியாமல் போனது.
இப்போது இதை மாற்றம் செய்துக்கொள்ள, ஆதார் ஆணையம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தெளிவு இல்லாத பழைய புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்றம் செய்ய வாய்ப்பளிக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைச் சரியாகப் பின்பற்றுங்கள். சிலரின் புகைப்படங்கள் தெளிவாக இருந்தாலும், ஆதார் அவற்றை மாற்றம் செய்ய அனுமதிக்கிறது. இதற்குப் பின்னணியிலும் ஒரு முக்கிய காரணம் உள்ளது.
முக்கிய அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படும் ஆதிரை பெரும்பாலானோர் பல ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்து வங்கியிருப்பீர்கள், உங்களின் முகம் இந்த காலகட்டத்திற்குள் மாற்றம் பெற்றிருக்கும். அதனால் தற்போதுள்ள அடையாளத்தை உங்கள் ஆதாருடன் அப்டேட் செய்வது முக்கியமானது. இதை எளிமையாகச் செய்ய இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இப்போது சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற அனுமதிக்கிறது. இதன் வதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எளிதாகப் புதுப்பிக்கலாம்.
அறிமுகமில்லாதவர்களுக்கு, UIDAI ஆனது இந்தியர்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் மற்றும் அனைத்து திருத்தக் கோரிக்கைகளையும் கவனித்துக் கொள்ளும் நிறுவனமாகச் செயல்படுகிறது. உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் அல்லது பிற விவரங்களையும் மாற்ற நீங்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்றாலும் கூட, உங்களுடைய முக அடையாளத்தை மாற்றம் செய்ய நீங்கள் முழுமையாக ஆன்லைனில் மட்டும் இந்த வேலையைச் செய்து முடிக்க முடியாது.
பாதுகாப்பு நலன் கருதி ஆதார் மையம் இந்த சேவையை நேரடி சேவையாக மட்டுமே வழங்குகிறது. உங்கள் புதிய அப்டேட் புகைப்படத்தை நீங்கள் ஆதார் மையத்திற்கு நேரில் சென்று அங்குள்ள பயோமெட்ரிக் முறைகளைப் பின்பற்றி மாற்றம் செய்ய வேண்டும். ஆதார் போட்டோ புதுப்பிப்புகளுக்கு விண்ணப்பிக்க அட்டைதாரர்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்குச் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் புகைப்படத்தை மாற்ற, அட்டைதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு கூட ஆதார் மையங்களுக்குச் செல்லலாம்.
- UIDAI இன் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
- போர்ட்டலில் இருந்து ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும்.
- படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
- நீங்கள் முழு படிவத்தையும் நிரப்ப வேண்டியதில்லை.
- புகைப்படத்தை மாற்றுவதற்குத் தேவையான பொருத்தமான பிரிவுகளை மட்டும் நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக