
நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். 15 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது ஜனவரி 3 முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் கோவிட் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. கோவின் பதிவு தளத்தில் இந்த வயதினருக்கான தடுப்பூசிகளை பதிவு செய்ய புதிய ஸ்லாட் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி ஸ்லாட் பொதுவாக ஆதார் அட்டைகளை பயன்படுத்தியே முன்பதிவு செய்யப்படுகிறது. இருப்பினும் மாணவர்கள் தங்கள் பள்ளி அடையாள அட்டையுடன் இடங்களை பதிவு செய்யலாம். சில சிறுவர்களிடம் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் பதிவு இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸ் மற்றும் சைடோஸ் கேடில்லாஸ் ப்சைகோவி-டி ஆகியை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக்-ன் கோவாக்ஸின் மருந்து இரண்டு அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் சைடோஸ் கேடில்லாஸ் ப்சைகோவி-டி மருந்து மூன்று அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக இந்த தடுப்பூசிகள் 12 வயது மற்றும் அதற்கு மேம்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி ஸ்லாட்குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டை முன்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டை முன்பதிவு செய்யும் செயல்முறை பெரியவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட முறையை போன்றது ஆகும். கோவிட் தடுப்பூசி ஸ்லாட்டுக்கு பதிவு செய்ய முதலில் கோவின் போர்ட்டலுக்கு சென்று தங்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் ஆதார் அட்டை அல்லது மாணவர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கான அடையாள அட்டை பயன்படுத்த அனுமதி அளித்த காரணம் சிலரிடம் ஆதார் அட்டை இல்லாததே ஆகும்.
பதிவு செய்த பிறகு, கோவின் போர்ட்டலில் இருந்து மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம். இந்த இடங்களில் ஜனவரி 3, 2022 முதல் (15 முதல் 18 வயது வரை) தடுப்பூசி சந்திப்புகளை பதிவு செய்யலாம். முன்னதாக குறிப்பிட்டப்படி, தடுப்பூசி இடங்களுக்கான முன்பதிவு செயல்முறையானது பெரியவர்களுக்கு போன்றவையாகும். இந்த செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் தடுப்பூசி இடங்களை முன்பதிவு செய்யலாம்.
இந்த போர்ட்டல் மூலம் மாணவர்கள் தங்கள் மாநிலம், மாவட்டம் அல்லது ஜிப் குறியீட்டின் படி அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம். கூடுதலாக கூகுள் வரைபடத்தின் மூலம் அருகலுள்ள தடுப்பூசி மையத்தை கண்டறியலாம். குழந்தைகள் தேர்வு செய்ய மூன்று விருப்பங்கள் திரையில் பட்டியலிடும். பதிவு பக்கம் திறந்தவுடன், உங்கள் வீடு அல்லது பள்ளிக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்கள் போன்றவைகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம்.
கோவின் போர்ட்டலில் பதிவுகள் நேரலையிலேயே இருக்கும் என்பதால் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் மொபைல் எண் அல்லது ஐடியை பயன்படுத்தி உமாங்க் மற்றும் ஹெல்த் சேது ஆப்ஸ்-ல் பதிவு செய்யலாம். இந்த ஆப்ஸ்களானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் போனைப் பொறுத்து, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். கோவிட் தொற்று நோயின் பரவலை தடுக்கும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மத்திய அரசு மேற்கொள்கிறது. குறிப்பாக ஒமிக்ரான் தொற்றை தடுக்க இது பெரிய நடவடிக்கையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக