
இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது முதல் மடிக்கணினியை அறிவித்தது. தற்போது இந்த பிராண்ட் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நாட்டில் அறிமுகம் செய்ய தயாராக இருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் நோட் 11எஸ் சாதனத்தை டிசம்பர் 13 ஆம் தேதி அன்று பிளிப்கார்ட் மூலமாக அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்மார்ட்போன் வருகையை நிறுவனம் முன்னதாகவே டீஸ் செய்து இருந்தது.
மிக நேர்த்தியான சாதனமாக இருக்கும்
இன்பினிக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டீசரை பகிர்ந்துள்ளது. அதில் வரவிருக்கும் நோட் 11-ன் அம்சங்களை பிராண்ட் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி31 உடன் ஒப்பிட்டிருக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 11 ஆனது இந்த பிரிவில் மிக நேர்த்தியான சாதனமாக இருக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும் போனின் விலை மிக மலிவாக இருக்கிறது
6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் AMOLED டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ஹீலியோ ஜி88 சிப்செட் ஆகியவற்றுடன் வரும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சர்வதேச சந்தையில் கிடைப்பதால் மீதமுள்ள விவரக்குறிப்புகள் முன்னதாகவே வெளிவந்தது.
Infinix Note 11 அம்சங்கள்
எக்ஸ்ஓஎஸ் 10.0 உடன் ஆண்ட்ராய்டில் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படும். மேலும் இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் கூடுதல் மெமரி விரிவாக்க ஆதரவுக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கும் என கூறப்படுகிறது.
50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் ஆகியவை உடன் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி யூனிட் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவை கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 11 சாதனம் மோட்டோ ஜி31-ஐ விட சிறந்ததா?
இன்பினிக்ஸ் நிறுவனம் மூலம் பகிரப்பட்ட டீசரின்படி இது மோட்டோ ஜி31 சாதனத்தை நேரடியாக போட்டியிடும் வகையில் இருக்கிறது. அந்த டுவிட்டில் "பாட் மெயின் மோடோரோனா" உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்குதான் தெரியும் என குறிப்பிட்டுள்ளது. அதில் இன்பினிக்ஸ் ஹீலியோ ஜி88 ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் அம்சம் மற்றும் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மோட்டோ சாதனம் டாசிர் பேட் உடன் வருகிறது. இதன் படத்தில் டோன்ட் கோ டாசில் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜி85-ஐ விட ஐ88, 20 வாட்ஸை விட 33 வாட்ஸ அதிகம் எனவும் 6.46 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட்டை விட 6.76 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் பெரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் மோட்டோ ஜி31 ஆகிய இரண்டு அம்சங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, இரண்டு மாடல்களும் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நோட் 11 ஆனது மோட்டோ ஜி31 உடன் ஒப்பிடும் போது பெரிய டிஸ்ப்ளே மற்றும் வேகமான சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா சாதனத்தை விட இன்பினிக்ஸ் விலை அதிகமாகுமா அல்லது மலிவானதாக இருக்குமா என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு வெளியான பிறகே இதன் விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.
நோட் 11 எஸ் சர்வதேச சந்தையில் முன்னதாகவே கிடைப்பதல் இதன் அம்சங்கள் நமக்கு முன்னதாகவே தெரியும். ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல் முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் குறித்து பார்க்கையில் இது 50 மெகாபிக்சல் மெயில் லென்ஸ் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்களை உள்ளடக்கிய குவாட் எல்இடி ஃபிளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு இது வரும் எனவும் கூறப்படுகிறது. 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவு, டிடிஎஸ் ஆடியோ ஆதரவோடு இரட்டை ஸ்பீக்கர்கள், லீனியர் மோட்டர் மற்றும் 3டி கிராபெனின் ஃபிலிம் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இது இரட்டை 4ஜி வோல்ட்-இ, ப்ளூடூத் 5.2, ஆடியோ ஜாக் ஆதரவோடு வருகிறது.
இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை அம்சம் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.15700 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பு இன்றி ரூ.20,000 விலைப்பிரிவில் வரும் எனவும் இது உயர்நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5ஜி இணைப்பு இல்லை என்றாலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி ரூ.15,700 என்ற விலையில் இருக்கிறது. இருப்பினும் இந்திய அறிமுகத்துக்கு பிறகே அதிகாரப்பூர்வ விலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக