
டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சில விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இனிமேல் ஓட்டுநர் உரிமத்திற்காக ஓட்டுநர் உரிமத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டுநர் உரிமத்தை (driving license) பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது மிக எளிதாக்கியுள்ளது. அரசின் இந்த புதிய விதி பற்றி தெரிந்து கொள்வோம்.
ஓட்டுநர் சோதனை இனி தேவையில்லை
டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. புதிய விதியின்படி, இப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO OFFICE)சென்று
வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டாம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்த புதிய விதிகள் இந்த மாதம் முதல் அமலுக்கு
வந்துள்ளன. இந்த புதிய மாற்றத்தால், ஓட்டுநர் உரிமத்திற்காக காத்திருப்போர்
பட்டியலில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
டிரைவிங் ஸ்கூல் சென்று பயிற்சி எடுக்க வேண்டும்
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக ஆர்டிஓ சோதனைக்காக காத்திருக்கும்
விண்ணப்பதாரர்களுக்கு அமைச்சகத்தால் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது
அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் ஏதாவது ஒன்றுக்கு
சென்று, ஓட்டுநர் உரிமத்திற்காக பதிவு செய்து கொள்ளலாம்.
அவர்கள் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று அங்கு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பள்ளியின் வாயிலாகவே சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழின் அடிப்படையில், விண்ணப்பதாரருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
புதிய விதிகள்
சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம், பயிற்சி மையங்களுக்கு சில
வழிகாட்டுதல்களையும், நிபந்தனைகளையும் விதித்துள்ளது. பயிற்சி மையங்கள்
அமைந்திருக்கும் பகுதி, இடம் முதல் பயிற்சியாளரின் கல்வித் தகுதி (Education Qualification) என பல வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1. இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான பயிற்சி அளிக்கும் மையங்கள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், நடுத்தர மற்றும் கனரக பயணிகள் சரக்கு வாகனங்கள் அல்லது டிரெய்லர்களுக்கான மையங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படும்
2. பயிற்சியாளர் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ஐந்து வருட ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க
வேண்டும், போக்குவரத்து விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்திற்கான கற்பித்தல்
பாடத்திட்டத்தையும் வகுத்துள்ளது. இலகுரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு,
பாடநெறியின் காலம் அதிகபட்சம் 4 வாரங்களில் 29 மணிநேரம் என்று
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுநர் மையங்களின் பாடத்திட்டமானது,
கோட்பாடு மற்றும் நடைமுறை என 2 பகுதிகளாக பிரிக்கப்படும்.
4. அடிப்படைச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள், நெடுஞ்சாலைகள், நகரச்
சாலைகள், ரிவர்சிங் மற்றும் பார்க்கிங், மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி
வாகனம் ஓட்டுதல் போன்றவற்றில் மக்கள் 21 மணிநேரம் ஓட்டக் கற்றுக் கொள்ள
வேண்டும். கோட்பாட்டுப் பகுதியில், 8 மணிநேர வகுப்புகள் எடுக்கப்பட
வேண்டும்.
இதில் சாலை விதிகளை புரிந்துக் கொள்வது, போக்குவரத்து தொடர்பான
விதிமுறைகள், விபத்துக்கான காரணங்களைப் புரிந்துகொள்வது, முதலுதவி மற்றும்
எரிபொருள் திறன் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது ஆகியவை அடங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக