Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 டிசம்பர், 2021

நழுவ விடக்கூடாதது... மிகவும் சுலபமானது... எது? வாழ்வின் 16 படிகள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------------

கமல் : பரவாயில்லையே.. சைக்கிள்கூட கேஸ்-ல ஓடுதா..?
விமல் : யோவ்... விளையாடாத! நான் கேஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்..
கமல் : 😮😮
---------------------------------------------------
நீதிபதி : ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வெச்சி கொல்லப் பாத்த?
கபாலி : என்னை ரசம் வச்சி கொல்ல பாக்குறா எஜமான், அதான்.
நீதிபதி : 😂😂
---------------------------------------------------
வாழ்வின் 16 படிகள்...!!
---------------------------------------------------
🌟 மிக மிக நல்ல நாள் - இன்று

🌟 மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு

🌟 மிகவும் வேண்டியது - பணிவு

🌟 மிகவும் வேண்டாதது - வெறுப்பு

🌟 மிகப்பெரிய தேவை - சமயோஜித புத்தி

🌟 மிகப்பெரிய கொடிய நோய் - பேராசை

🌟 மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

🌟 மிகவும் கீழ்த்தரமானது - பொறாமை

🌟 நம்பக்கூடாதது - வதந்தி

🌟 ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

🌟 செய்ய வேண்டியது - உதவி

🌟 விலக்க வேண்டியது - விவாதம்

🌟 உயர்வுக்கு வழி - உழைப்பு

🌟 நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு

🌟 பிரியக்கூடாதது - நட்பு

🌟 மறக்கக்கூடாதது - நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக