ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.
தற்போது ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு சிலஆன்லைன் தளங்களில் சலுகையுடன் சில பொருட்கள் கிடைக்கிறது. எனவே மக்கள் இதையே அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு, கிடைத்த பார்சலில் இருந்த பொருள் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம். இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் எனனும் பகுதியை சேர்ந்தவர் டேனியல் காரோல்.
டேனியல் காரோல் ஆன்லைன் மூலம் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். இதற்குவேண்டி £1,045 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம்) ஆன்லைன் மூலம் செலுத்தவும் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இவர் ஆர்டர் செய்த மொபைல் போன் வருவதற்கு தாமதம் ஆனாதாக கூறப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட தினத்தை விட, இரண்டு வாரங்கள் தாமதமாக டேனியலிடம் பார்சல் வந்துள்ளது.
அதன்பின்பு ஒருவழியாக வீட்டுக்கு கொண்டுவந்த அந்த பார்சலை திறந்த பார்த்த டேனியல் காரோலுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அதாவது அந்த பார்சலில் மொபைல் போன் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு Diary Milk Oreo White சாக்லேட்டுகள், டாய்லெட் பேப்பர் மூலம் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
உடனே பதறிப் போன டேனியல் அடுத்த நிமிடமே தனது பார்சலை கொண்டு வந்த DHL நிறுவனத்தாரிடம் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக தனக்கு வர வேண்டிய நேரத்திலும் மொபைல் போன் வந்து சேரவில்லை. பின்பு ஒருமுறை டெலிவரிக்கு தயாராகி விட்டது என தகவல் வந்தது. ஆனால் மீண்டும் தாமதம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டது. இப்படியே மொபைல் போன் வருவதற்குபலவித சிக்கல்கள் இருந்தது. நானும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தான் வேலை செய்கிறேன். பார்சல் என்னிடம் வந்து சேர ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது எனக்கு புரியவில்லை என்று டேனியல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவரின் புகாருக்கு பதில்கொடுத்த DHL நிறுவனம், நாங்கள் உங்களது புகாரை முன்னுரிமை எடுத்து விசாரித்து வருகிறோம். விரைவில் இதற்கான மாற்றுப் பொருள் கிடைக்க பெறுவதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோல் கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக