
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சில வாரங்களுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய பின்பு தற்போது புதிய ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் கிட்டத்தட்ட அதிக நன்மைகளுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை இந்த புதிய திட்டத்தின்மூலம் பெற முடியும்.
ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான ஒரு மாதத்திற்கான இலவச சந்தா,ஷா அகாடமி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளுக்கு ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக