
மத்தியப் பிரதேசத்தில் டீ விற்பனையாளர் ஒருவர் தனது ஐந்து வயது மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கியதை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளார். சீரியல் லைட்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் சில சிறுமிகள் அமர்ந்திருந்து இந்த ஸ்மார்ட்போனை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். தனது ஐந்து வயது மகளுக்கு வாங்கிய இந்த மொபைலே தனது குடும்பத்தில் ரூ.12,500 விலையில் வாங்கிய முதல் மொபைல் என அவர் தெரிவித்துள்ளார்.
டீ விற்பனையாளர் ஒருவர் தனது ஐந்து வயது மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கியதை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளார். ரூ.12,500 விலையில் வாங்கிய தனது குடும்பத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது என அந்த நபர் தெரிவித்துள்ளார். இரவு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் சில சிறுமிகள் அமர்ந்து இந்த மொபைலை எடுத்து வருகின்றனர். அதோடு ஒலிபெருக்கியில் ஒரு பாடல் இசைக்கப்பட்டப்படி மக்கள் ஊர்வலமாக இதை கொண்டாடி வருகின்றனர்.
தேநீர் விற்று வாழ்தாரத்தை நடத்தி வருபவர் முராரி குஷ்வாஹா, இவர் செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஷிவ்புரி நகரின் பழைய பகுதியில் ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு அங்கிருந்து தனது வீட்டிற்கு மேள தாளம், குதிரை வண்டி, பட்டாசுகள் உடன் ஊர்வலமாக எடுத்து வந்தோம். அதோடு மட்டுமின்றி வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்ததாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மொபைல் போன்
தனது ஐந்து வயது மகள் தனக்கு மொபைல் போன் வாங்கித் தருமாறு நீண்ட நாட்களாக தன்னிடம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும், தனது 5 வயது மகள் மதுவை கைவிடுமாறும், அந்த பணத்தை சேமித்து தொலைபேசி வாங்குமாறும் கேட்டுக் கொண்டதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் போன் வாங்கும் போது முழு நகரமும் அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என தான் உறுதியாக இருந்ததாக குஷ்வாஹா குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக