
தென்கொரியன் ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் மிகவும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சாம்சங் நிறுவனத்துக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கின்றனர். பிராண்டின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பிரிவில் கேலக்ஸி எஸ் தொடர் சாதனம் இடம்பெறுகிறது. இந்த பிரிவில் இடம்பெறும் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் உடன் தொடர்புடையதாக இருக்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தில் இருந்து வரவிருக்கும் உயர்ரக ஸ்மார்ட்போன் பிரிவுகளில் சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஸ்2+, சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என கூறப்படுகின்றன.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பிரைமரி சென்சாரின் ரெசல்யூஷன் உடன் 108 எம்பி கேமரா இருக்கும் எனவும் இது மூன்று வருடமாக சாம்சங் ஒப்டிமைஸ் செய்தவையாகும். அதேபோல் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் அதிகபட்ச திறன்கள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால் சாம்சங்-ன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனாக வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ்-ல் புதிய சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ்-ல் ஐசோசெல் எச்பி 1 சென்சார் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ்-க்கு பின்னர் வெளியிடப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஹை என்ட் மாடலான கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200 மெகாபிக்சல் ரெசல்யூஷன் கொண்ட புதிய சென்சார் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபி அனுபவத்தை மாற்றி அமைக்கும் வகையிலான சென்சார் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் பகுதியில் சாம்சங்கின் ஐஎஸ்ஓசெல்பி1 சென்சார் சப்போர்ட் செய்யப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சாம்சங் புதிய ஐஎஸ்ஓசெல் எச்பி 1 சென்சாரின் ஆப்டிகல் ஃபார்மட் 1 / 1.22 உடன் வரும் என கூறப்படுகிறது. அதன் பிக்சல் அளவு 0.64 மைக்ரோன் ஆகும். ஐஎஸ்ஓசெல் எச்பி1 சென்சாரில் செகண்டிற்கு 30 ப்ரேம் என்ற முறையில் 8கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். குறைந்த தூரத்திலும் இது சாத்தியமாக்கப்படும். அதுமட்டுமின்றி சாம்சங்கின் இந்த சென்சார்கள் உலகின் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன் கேமரா தயாரிப்பில் மிகவும் முன்னோக்கி செல்கின்றன.
உயர் ரெசல்யூஷன் இமேஜ் சென்சார்உயர் ரெசல்யூஷன் இமேஜ் சென்சாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அல்ட்ராஃபைன் பிக்சல் தொழில்நுட்பங்களுக்கு சாம்சங் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் சென்சார் பிசினஸ் எக்சிக்டிவ் வைஸ் பிரசிடென்ட் டக்யுன் சாங் சமீபத்தில் குறிப்பிட்டார். தற்போதுள்ள குறைகளை மாற்றியமைக்கும் ஐஎஸ்ஓசெல் எச்பி1 சென்சாரும் அல்ட்ராஃபாஸ்ட் ஆட்டோஃபோகஸ் சென்சாரையும் நிறுவனம் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை அனுபவத்தை நிறுவனம் வழங்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
புதிய ஐஎஏஸ்ஓசெல் எச்பி1 சென்சாரில் புதிய செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்பட இந்த தொழில்நுட்பத்தில் வித்யா டு-பை-டு, ஃபோர்-பை-ஃபோர், ஃபுல் பிக்சல் லே அவுட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சாதனத்தில் அல்ட்ரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என சாம்சங் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரெசல்யூஷன் 50 அல்லது 12.5 எம்பி மூலம் சிறந்த படங்களை பதிவு செய்ய முடியும். பிக்சல் அளவு 1.28 மைக்ரானும், இரண்டாவதாக 2.65 மைக்ரானும் இருக்கும் என கூறப்படுகிறது. சென்சார் 30 எஃப்பிஎஸ்சில் 8கே வீடியோவும் 120 எஃப்பிஎஸ்சில் 4கே வீடியோ பதிவும் செய்யமுடியும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக