Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 டிசம்பர், 2021

45 நொடிகளில் 'பீட்சா' தயாரிக்கும் ரோபோ? SpaceX நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர்கள் அசத்தல்.!

 தயாரிக்கும் ரோபோ ஒன்றை

மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் உணவுகளில் ஒன்றுதான் பீட்சா. குறிப்பாக ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல பீட்சாவில் வைக்கப்படும் உணவு வகைகள் மாறுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தந்தூரி சிக்கன், பன்னீர் ஆகியவற்றை வைத்தும் காரமாகவும் பீட்சாவைத் தருகிறார்கள். இன்று இந்திய நகரங்களில் பீட்சா கார்னர்கள் இல்லாத இடமே இல்லை. அந்தளவிற்கு பீட்சா பிரபலமடைந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பொறியாளர்களாக பணியாற்றிய மூன்று பேர் 45 நொடிகளில் பீட்சாதயாரிக்கும் ரோபோ ஒன்றை களமிறக்க உள்ளனர். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்பேகஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சியை செயல்படுத்திவருகிறார் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இப்போது ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களின் புதிய முயற்சி  அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதாவது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர்களான ஜேம்ஸ் வஹாவிசன், பென்சன் சாய், பிரையான் லாங்கோன் ஆகியோர் 45 நொடிகளில் பீட்சா தயாரிக்கும் ரோபோவை களமிறக்க உள்ளனர். குறிப்பாக அடுத்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டெல்லர் பீட்சா என்ற பெயரில் ரோபோ எந்திரங்கள் தயாரிக்கும் பீட்சா டெலிவரி செய்யப்படும் எனஅந்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பீட்சாவை தயாரிப்பது, பேக் செய்வது மற்றும் Topping செய்ய என அனைத்தையும் ரோபோ செய்யும் என மூவரும் தெரிவித்துள்ளனர். அதேபோல் மலிவான விலையில் துரிதமாக பீட்சாவை வழங்குவதுதான் தங்களது நோக்கம் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களின் ரோபோ அதிவிரைவாக 45 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு பீட்சா என்ற முறையில் பீட்சாவை தயாரித்து கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது உதாரணமாக கூறவேண்டும் என்றால் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோ உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர் தான் இந்த எலான் மஸ்க். இவர் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எலான் மஸ்க் அவர்களின் தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்தே இருக்கும்.

அதேபோல் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனத்தில் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் தற்போதைய சூழலுக்கு தகுந்தபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுவருகிறது இந்த டெஸ்லா நிறுவனம்.

ஏற்கனவே கூறியபடி டெஸ்லா நிறுவனம்எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போலவே ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான்மஸ்க் தெரிவித்துள்ளார். பின்பு டெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும் எலான் மஸ்க் அறிவித்த தகவலின் அடிப்படையில், 5 அடி, 8 இன்ச் உயரமும் 125 பவுணடுகளும் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம். பின்பு இது மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையில் அதனை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த ரோபோவின் மாதிரி வடிவம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.பின்பு மணிக்கு 5 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும் எனவும், 45 பவுண்ட் எடையை இது சுமக்கவும் செய்யும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இந்த அதிநவீன ரோபோவின் முகத்தில் திரை இருப்பதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

குறிப்பாக இது போன்ற ரோபோக்கள் மூலம் மனிதர்கள் தங்களின் சலிப்பூட்டும் வழக்கமாக பணிகளில் இருந்து விடுபட முடியும் என்று எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதேபோல் சீன எலெக்ட்ரானிகஸ் தயாரிப்பாளரான சியோமி சைபர் டாக் என்றழைக்கப்படும் தனது முதல் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நிறுவனம் பல கட்டம் முன்னோக்கியுள்ளது. இதுஒரு சோதனையாகும், இந்த இயந்திரம் முன்னறிவிக்கப்படாத பல சாத்தியங்களை வைத்திருக்கிறது என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக