Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 29 டிசம்பர், 2021

2021 ஆம் ஆண்டில் மக்களுக்கு கைகொடுத்த டாப் 10 ஆப்ஸ்!

 Top 10 Most Popular Apps to Download in 2022
கொரோனா முதல் அலையை போல் இரண்டாம் அலையும் மக்களை பெரிதாக பாதித்தது. தொடர்ச்சியான ஊரடங்கும், அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைப் பெறுவதில் பிரச்சனையை ஏற்படுத்தின. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு, தொழில்நுட்பம் கைகொடுத்தது. பல்வேறு ஆப்ஸ்கள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, கொரோனா பிடியில் சிக்கியிருந்த மக்களுக்கு உதவியாக இருந்தா சிறந்த ஆப்ஸ் பட்டியல் இங்கே.

அமேசான் ஆப்
 
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அமேசான், உங்களுக்கு வேண்டிய பொருட்களை உலகின் மூலை முடுக்கில் இருந்தும் பெறக்கூடிய வசதியை வழங்கியுள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், வெளியில் செல்ல முடியாத நிலையில், மளிகை பொருட்கள் முதல் மொபைல் போன்கள், லேப்டாப்கள் வரை வீட்டிலேயே டெலிவரி செய்தது அமேசான்.

சொமாடோ

ஏற்கனவே, உணவு டெலிவரி நிறுவனங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு டெலிவரி செய்து வந்துள்ளது. ஊரடங்கு காலத்தில், எல்லாருமே வீட்டிலேயே இருந்தபடி வேலை செய்ய, அதிகப்படியான நபர்கள் சொமாடோவைப் பயன்படுத்தி உணவை ஆர்டர் செய்துள்ளனர். வெளியிடங்களில் உணவு சாப்பிட வேண்டிய சூழல் இருப்பவர்களுக்கும் ஹைஜீனிக் உணவுகளை வழங்கியதில் சொமடோவின் பங்கு அதிகம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் சொமாடோ நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய சேது

தேவையான பொருட்கள் அல்லது உணவு மட்டுமின்றி, கொரோனா தொற்று பற்றிய தகவல், வசிக்கும் இடத்தில் எவ்வளவு நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா அறிகுறிகள் உள்ளனவா உள்ளிட்ட பல்வேறு விவரங்களை டிராக் செய்ய இந்த ஆப் உதவியாக இருந்தது. இது தேவையற்ற இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க உதவியது.

Zoom ஆப்

கொரோனா தொடங்கிய சில வாரத்தில் பிரபலமாகத் தொடங்கிய இந்த வீடியோ ஆப், தனிப்பட்ட முறையில் வீடியோ வழியாக உரையாடுவது முதல், ஆன்லைன் வகுப்புகள், அலுவலக சந்திப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள், பிறந்த நாள் / திருமண நாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற உதவியாக இருந்தது.

கூகுள் கிளாஸ்ரூம்

கூகுளின் அறிமுகப்படுத்திய பல்வேறு தயாரிப்புகளில் கடந்த ஆண்டு அதிகப் பயனுள்ளதாக கூகுள் கிளாஸ்ரூம் இருந்தது. இது பள்ளி மாணவர்களுக்கான ஒரு படிக்கும் கருவியாகவும், ஆன்லைன் நூலகமாகவும் பயன்பட்டது. டிஜிட்டல் முறையில் மாறி வரும் கல்வி முறைக்கு, ஊரடங்கு காலத்தில் கூகுள் கிளாஸ்ரூம் ஆசிரியர்-மாணவர் இடையே பாலமாக விளங்கியது.

ஃபேஸ்புக்

சமூக வலைத்தங்களில், எல்லா தரப்பினராலும் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக அதிகரித்தது.

நெட்ஃபிளிக்ஸ்

வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில், OTT தளங்கள் மக்களின் பொழுபோக்கு மையமாக மாறியது. பல நாட்டு திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் மிகப்பெரிய தளமாக நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டு அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டது. நெட்ஃபிளிக்ஸ் சந்தா விலை அதிகமாக இருந்தாலும், மற்ற தளங்களை விட இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

ஸ்பாட்டிஃபை

வீடியோ பொழுதுபோக்குத் தளத்தில் முன்னணியில் வகிக்கும் நெட்ஃபிளிக்ஸ் போலவே, ஆடியோ செயலியாக, ஸ்பாட்டிஃபை இந்த டாப் 10 ஆப்ஸ் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.

LinkedIn

வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்களை இணைக்கும் உலகளாவிய தளம் LinkedIn. அது மட்டுமின்றி, இதுவரை அதிகமாக வெளிவராத வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும் இந்தத்தளம் உதவியது.


உபெர்

ஊரடங்கால், பேருந்து மற்றும் ரயில்கள் இயங்க தடை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், உபெர் ஆப் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய உதவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக