Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 டிசம்பர், 2021

2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!


2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!

நடப்பு ஆண்டான 2021-ல் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.  அந்த வகையில் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'ஜெய் பீம்'.  இப்படம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த மக்கள் படும் துயரங்களை துணிச்சலாக எடுத்து காட்டியது.  இருளர் சமூகத்தை சேர்ந்த பார்வதி( செங்கனி) என்ற பெண் பொய்யாக திருட்டு பலி சுமத்தப்பட்ட தனது கணவரை மீட்க போராடும் கதையை இப்படத்தில் எழுச்சியுடன் காண்பித்தனர்.  இதில் முக்கிய கதாபாத்திரமாக வக்கீல் சந்துருவாக சூர்யா சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த படத்தை கூகுளில் மக்கள் அதிகமாக தேடியுள்ளனர்.  இதனையடுத்து சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் வெளியான "ஷெர்ஷாஹ் (Shershaah)" படம் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.  அடுத்ததாக சல்மான் கான் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படமான "ராதே" படமும், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படமான 'பெல்பாட்டம்' படமும் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.  மேலும் பெல்பாட்டம் படம் இரண்டாம் ஊரடங்கிற்கு பின் திரையரங்குகளில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்ஜில்லா vs காங், மார்வெல் ஏடர்னல்ஸ், த்ரிஷ்யம்2 போன்ற படங்கள் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.  இதுபோன்று  அதிகம் தேடப்பட்ட படங்கள் மட்டுமல்லாது, 2021-ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

1) ஆர்யன் கான் :

ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் அக்டோபர்-2ல் கைது செய்யப்பட்டு, அக்டோபர்-28 ல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2) ஷெஹ்னாஸ் கில் :

சித்தார்த் சுக்லாவின் மரணத்திற்கு பிறகு ரசிகர்கள் அதிகம் வருத்தப்பட்டது, ஷெஹ்னாஸ் கில்லின் உடல்நலம் மற்றும் மன நலம் குறித்து தான்.  

3) ராஜ் குந்த்ரா :

ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா செப்டம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டார்.

4) நடாஷா தலால் :

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் வருண் தவான் தனது காதலியான நடாஷா தலாலை மணம் முடித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக