
2021-ம் ஆண்டு பிரபலமான தேடல்கள் குறித்து கூகுள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அதிகம் தேடப்பட்ட டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், செய்திகள், வீடியோ கேம்கள் போன்றவைகளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமானவற்றின் பட்டியல் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
இதில் டிவி நிகழ்ச்சிக்கான தேடலில் முக்கிய பங்கு வகிப்பது ஸ்க்விட் கேம். Netflix தளத்தின் சிறந்த 10 தொடர்கள், T20 உலக கோப்பை கிரிக்கெட், ராப் பாடகர் DMX பற்றிய தேடல்கள் அதிகளவில் இருந்தது. அதன்படி டிவி நிகழ்ச்சிகளில் ஸ்க்விட் கேமை தொடர்ந்து பிரிட்ஜெர்டன், வாண்டாவிஷன், கோப்ரா காய் மற்றும் லோகி ஆகியவை அதிகளவில் தேடப்பட்டுள்ளன. மேலும் அதிகம் தேடப்பட்ட படங்கள், கேம்கள், சூப்பர் ஹீரோக்கள் ஆகியவற்றின் பட்டியல் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது கூகுள்.
மார்வெல் படங்களான ஏடர்னல், பிளாக் விடோ,ஷாங்சி, டூன், ரெட் நோட்டிஸ், மோர்ட்டால் காம்பாட், க்ரூயெல்லா மற்றும் காட்ஜில்லா வெர்சஸ் ஆகியவை அதிகம் தேடப்பட்டுள்ளன. இவைதான் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்டு ட்ரெண்டிங்கான தலைப்புகள் என்று கூகுள் கணித்துள்ளது.
மேலும் 2021-ம் ஆண்டு பிரபலமாக இருந்த சில கூகுள் தேடல்கள் :நடிகர்களில் அலெக் பால்டுவின், உணவு பொருளான பிர்ரியா டகாஸ், ரான்ச் வாட்டர் சிறந்த ஆல்கஹால் ரெசிபி, FIFA 22 ஆகியவை அதிகமாக தேடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக