Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 டிசம்பர், 2021

மின்சார வாகனங்கள் மட்டுமின்றி, ட்ரோன்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ள விவோ!! வர்த்தக முத்திரையை தாக்கல் செய்தது

மின்சார வாகனங்கள் மட்டுமின்றி, ட்ரோன்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ள விவோ!! வர்த்தக முத்திரையை தாக்கல் செய்தது

பிரபல எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான விவோ அதன் இவி-களுக்கான காப்புரிமையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவில் செயல்பட்டுவரும் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக விவோ விளங்குகிறது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, இதர எலக்ட்ரானிக்ஸ் பாகங்களையும் தயாரிக்கும் விவோ சீனாவை தாண்டி இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.

இத்தகைய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுப்பட கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பிற்காக விவோ பதிவு செய்துள்ள காப்புரிமை குறித்த படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை தான் கீழே காண்கிறீர்கள்.

மின்சார வாகனங்கள் மட்டுமின்றி, ட்ரோன்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ள விவோ!! வர்த்தக முத்திரையை தாக்கல் செய்தது

இதில், கிட்டத்தட்ட 3.5 வருடங்களுக்கு முன்னர் விவோ தனது பெயரை எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பிற்காக பதிவு செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு இந்த படம் தற்போதுதான் கிடைத்துள்ளது. இவி தயாரிப்பில் விவோவின் வர்த்தக முத்திரை எத்த்னை ஆண்டுகளுக்கு செல்லப்படியாகும் என்பது இதில் குறிப்பிடப்படவில்லை.

பிரிவு-12இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தக முத்திரை விண்ணப்பத்தின் மூலம் பார்க்கும்போது, எலக்ட்ரிக் வாகனங்கள், கார்கள், மோட்டார்சைக்கிள்கள், ஓட்டுனர் இல்லா கார்கள் (தானியங்கி கார்கள்), பை-சைக்கிள்கள், மொபெட்கள், தன்னிச்சையாக சமநிலைப்படுத்தி கொள்ளக்கூடிய வாகனங்கள், எலக்ட்ரிக் சைக்கிள்கள், யுனிசைக்கிள், ரிமோட் கண்ட்ரோல் வாகனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்காக விவோ தனது வர்த்தக முத்திரை தாக்கல் செய்துள்ளது.

மேலும், தண்ணீர் வாகனங்கள், வான் வாகனங்கள், புகைப்பட ட்ரோன்கள், வான்வழி ட்ரோன்கள் உள்பட பொம்மை வாகனங்களை கூட தயாரிக்கவும் விவோ திட்டமிட்டிருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது, ஓட்டுனர் இல்லா இயங்கும் கார்களை ஆகும். ஏனெனில் இத்தகைய வாகனங்கள் உற்பத்தியில் டெஸ்லாவே இன்னமும் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் ஓட்டுனர் இல்லா இயங்கும் வாகனங்கள் அதிகளவில் தயாரிக்கப்படும் என்பது உறுதி. ஆகையால் எதிர்காலத்திற்கும் சேர்த்து விவோ ஆட்டோமொபைல் துறைக்கான தனது திட்டங்களை வகுத்து வைத்திருப்பதை அறிய முடிகிறது. இருப்பினும் இந்த படத்தில், விண்ணப்பத்தின் நிலை "opposed" என குறிக்கப்பட்டுள்ளதை மறந்துவிட வேண்டாம்.

இதன் அர்த்தம் என்னவென்றால், இந்தியாவில் விவோ தனது காப்புரிமை விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளதற்கு மூன்றாம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதாகும். இதனாலேயே விவோவின் முதல் எலக்ட்ரிக் வாகனம் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது தற்போதுவரையில் தெரியாத ஒன்றாகவே உள்ளது. விவோ மட்டுமல்லாமல், ஒன் ப்ளஸ், ஒப்போ போன்ற பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இவி தயாரிப்பில் இறங்க ஆயத்தமாகி வருகின்றன.

இந்த வகையில் ஒன் ப்ளஸ் இந்தியாவில் "ஒன் ப்ளஸ் லைஃப்" என்கிற பெயரை தனது புதிய இவி வாகனத்திற்காக பதிவு செய்து கொண்டுள்ளது. ஒன் ப்ளஸ் நிறுவனமும் ஓட்டுனர் இல்லா இயங்கும் கார்கள், தன்னிச்சையாக-சமநிலைப்படுத்தி கொள்ளக்கூடிய ஸ்கூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் வாகனங்கள், பொது பயன்பாட்டு ட்ரோன்கள் மற்றும் எலக்ட்ரிக் யுனி-சைக்கிள்கள் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ஒப்போ அதன் முதல் இவி-ஐ இந்திய சந்தையில் 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். இவை மட்டுமின்றி, ஸியோமி, ஹூவாய் மற்றும் ஆப்பிள் போன்றவையும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் எதிர்காலத்தில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்து வருகின்றன. இவ்வாறு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் வரிசையாக இவி தயாரிப்பில் இறங்குவதற்கு காரணம், தற்போதைய எலக்ட்ரிக் வாகனங்களில் அதிகளவில் எலக்ட்ரானிக் பாகங்கள் பயன்படுத்தப்படுவதுதான்.

எரிபொருள் என்ஜின் வாகனங்களில் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் உள்ளிட்ட சில பாகங்களை தவிர்த்து பெரிய அளவில் எலக்ட்ரானிக் பாகங்கள் தேவைப்படுவதில்லை. இவை கூட தற்போதைய மாடர்ன் எரிபொருள் என்ஜின் கார்களில் தான் சிறிதளவு தேவைப்படுகின்றன. முந்தைய காலங்களில் இந்த அளவிற்கு கூட தேவைப்படவில்லை. ஆனால் அப்படியே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வந்தோமேயானால், இவற்றில் முக்கியமான இயக்க ஆற்றலை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார், பேட்டரி, இதனை சார்ஜ் ஏற்ற விரைவு சார்ஜர் உள்ளிட்டவை அனைத்து எலக்ட்ரானிக் பாகங்களாகும்.

இத்தகைய அம்சங்கள் விவோ, ஒப்போ, ஒன் ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகின்றன. இதனால் தான் இந்த நிறுவனங்கள் தைரியமாக இவி பிரிவில் பல கோடி டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் கோலோச்சி வரும் பிராண்ட்களுக்கு மத்தியில் இவற்றின் தயாரிப்புகள் வரவேற்பை பெறுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக