ஆடியோ தயாரிப்புகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாகவே அதிவேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலின் போது ஆடியோ சாதனங்கள் தேவை பிரதானமாக இருந்தது. வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் முக்கிய பங்காக ஆடியோ பாகங்கள் மாறியது. ரியல்மி, நாய்ஸ் மற்றும் நோக்கியா பிராண்டுகள் நாட்டில் மலிவு விலையில் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்களை விற்பனை செய்கின்றன.
2022-ல் புதிய டேப்லெட்கள்
இந்த நிலையில் நோக்கிய இன்னும் சில ஆடியோ தயாரிப்புகளை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. சமீபத்திய வளர்ச்சியாக எச்எம்டி குளோபல் 2022-ல் புதிய டேப்லெட்கள் உடன் பல ஆடியோ தயாரிப்புகளை வெளியிடும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சாதனத்தின் சரியான கால வரிசை வெளியிடப்படவில்லை.
புதிய ஆடியோ தயாரிப்புகள்
நோக்கியா 2022 இல் புதிய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியா டுடே உடனான உரையாடலில் எச்எம்டி குளோபல் துணைத் தலைவர் சன்மீத் சிங் கோச்சார், 2022 ஆம் ஆண்டில் பிராண்டின் வரவிருக்கும் வெளியீட்டுத் திட்டங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அடுத்த ஆண்டு நாட்டில் அதிக ஆடியோ அக்சஸரிஸ்களை கொண்டு வரும் எனவும் கூறினார்.
டிடபிள்யூஎஸ் இயர்போன்கள், வயர்டு ஹெட்போன்கள் உள்ளடக்கிய பல சாதனங்களை நிறுவனம் கொண்டு வரும் என கூறப்படுகிறது. டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்கள் வயர்டு ஹெட்போன்கள் தற்போது பெரிய சந்தைகளாக இருக்கின்றன. நிறுவனம் தற்போது இதில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் வரவிருக்கும் சாதனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மூலமாக கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நோக்கிய பவர் இயர்பட்ஸ்
தற்போதைய நிலவரப்படி, நோக்கிய பவர் இயர்பட்ஸ் லைட் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான இயர்போன்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ.3599 ஆகவும் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் விலை ரூ.7499 என இரண்டு ப்ளூடூத் மூலம் இயங்கும் ஆடியோ தயாரிப்புகள் கிடைக்கிறது.
அமெரிக்க நிறுவனம்னு பேரு., தலைமை இந்தியர்கள்: சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை இப்போ பராக் அகர்வால்- காரணம் இதோ!அமெரிக்க நிறுவனம்னு பேரு., தலைமை இந்தியர்கள்: சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை இப்போ பராக் அகர்வால்- காரணம் இதோ!
நோக்கியா டேப்லெட்டுகள்
ஆடியோ தயாரிப்புகளுடன் நோக்கியா அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய டேப்லெட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பிராண்ட் தனது முதல் டி20 டேப்லெட்டை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இது ரூ.15499 ஆகும், அம்சங்களை பொறுத்தவரை, டேப்லெட் 10.36 இன்ச் (2000 x 1200 பிக்சல்) 5:3 விகித IPS LCD திரையுடன் 400 nits பிரகாசம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது.
நோக்கியா டி20 டேப்லெட்
நோக்கியா டி20 டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் இரண்டு வருட மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு புதிப்பிப்புகளை பெறுவதாக உறுதியளித்திருக்கிறது. இது கூகுள் கிட்ஸ் ஸ்பேஸ் மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8200 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. நோக்கியா டி20 டேப்லெட்கள் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கிறது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக