----------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------
அம்மா : டேய் ஏன்டா... முடிய நீளமா வளத்துக்கிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிகிட்டு அலையற.
மகன் : இது தாம்மா இப்போ ஃபேஷன்.
அம்மா : நாயே... உங்க அக்காவ பொண்ணு பாக்க வந்தவங்க... உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காங்க...
மகன் : 😆😆
----------------------------------------
உறவினர் : போயும்... போயும்... வேலைக்கே போகாத பையனை உங்க பெண்ணுக்கு கட்டி வெச்சுட்டீங்களே..?
பெண்ணின் தந்தை : 'ஒர்க் ஃப்ரம் ஹோம்"-னு சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன்..!
உறவினர் : 😩😩
----------------------------------------
சிந்திக்க மட்டுமே...!!
----------------------------------------
😎 குறைசொன்னது யார்? என்பதை...
😎 இரண்டாவதாக பார்...
😎 சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா?...
😎 என முதலாவதாக பார்...
----------------------------------------
அன்பு பயம் அறியாதது...!!
----------------------------------------
ஓர் இளம் தாய் 🙎 தெரு வழியாகச் சென்று 🚶 கொண்டிருக்கிறாள்...
அவளைப் பார்த்து ஒரு நாய் 🐶 குரைக்கிறது....
அவள் பயந்து 😟 அருகிலுள்ள வீட்டில் 🏡 தஞ்சம் புகுகிறாள்...
மறுநாள் அதே தாய் 🙎 தன் குழந்தையுடன் 👶 சென்று கொண்டிருக்கிறாள்...
திடீரென ஒரு சிங்கம்🦁 அவள் குழந்தையின்👶 மீது பாய்கிறது....
அவள் அப்போது என்ன செய்வாள்?🤔
சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக்👶 காப்பாற்றுவாள் அல்லவா?
இவ்வுதாரணமே உண்மையான அன்பின்💞 இலக்கணத்தை விளக்குகிறது.
நீதி : அன்பு பயம் அறியாதது.
----------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக