Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 டிசம்பர், 2021

உங்க ராசிப்படி 2022-ல் நீங்க செய்யக்கூடாத விஷயம் என்ன தெரியுமா? தெரியாமகூட இதெல்லாம் பண்ணிராதீங்க...

Things Should Not Do In 2022 As Per Your Zodiac Sign in Tamil

ஒவ்வொரு ஆண்டும், நாம் அனைவரும் "புத்தாண்டு தீர்மானம்" செய்கிறோம், நம்மில் சிலர் மட்டுமே அதனை கடைபிடித்து வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் பரிதாபமாக தோல்வியடைகிறார்கள். நம்மைப் பற்றிய புதிய பிம்பத்தை உருவாக்குவது எப்பொழுதும் புதிரானதாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. ஏனெனில் நமக்குள் நடக்கும் போரில் நாம் வெற்றி பெற்றால் மட்டுமே கடந்த காலத்தை விட நம்முடைய ஒரு சிறப்பான வெர்சனை நம்மால் உருவாக்க முடியும்.

புதுவருட கணிப்புகளின் படி ஒவ்வொரு ராசிக்கும் வரப்போகிற ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டிருப்போம். கடந்த காலத்தை விட சிறப்பானவராக சில விஷயங்களை செய்தால் மட்டும் போதாது சில விஷயங்களை செய்யாமலும் இருக்க வேண்டும். அதன்படி உங்கள் ராசியின்படி நீங்கள் புதுவருடத்தில் என்னென்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கடந்த கால வாழ்க்கை அல்லது உங்கள் கடந்த கால தவறுகள் உங்களை முன்னோக்கி நகர்வதைத் தடுக்க அனுமதிக்க வேண்டாம். நீங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு தொடருங்கள, வெற்றியும் மனநிறைவும் இந்த ஆண்டு உங்களுக்காக காத்திருக்கிறன்றன.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் எல்லைகளிலிருந்து விடுபட, உங்கள் கவலைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை நீங்கள் விட்டுவிட வேண்டும். புதிய விஷயங்களை முயற்சிக்கவும், அனைத்திற்கும் எளிதான வழிகளை தேடக்கூடாது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறைக்கு மாறுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும். ஆரோக்கியமான உடல் உங்கள் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.

கடகம்

கடகம்

உங்களின் சிறந்த மற்றும் மோசமான குணாதிசயங்களைக் கண்டறிந்து மோசமான குணத்தை உங்களிடமிருந்து பிரிக்க முயற்சிக்கவும்.நிச்சயம் நீங்கள் விரும்பும் மாற்றம் 2022 இல் நிகழும். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியாததால், சிறந்த வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பொறுமையாக இருங்கள், புத்தாண்டில் உங்கள் முயற்சிகளுக்கு உடனடி வெகுமதிகளை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் விரும்புவது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும், எனவே பயப்பட வேண்டாம்.

கன்னி

கன்னி

நீங்கள் அக்கறையுள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லோருடனும் நட்பாக இருக்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி கவலைப்படாதவர்களுடனான நட்பை இந்த ஆண்டு விட்டுவிடுங்கள்.

துலாம்

துலாம்

புத்தாண்டில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த ஆண்டு கடந்த இரண்டு வருடங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்த வருடத்தை அதிகம் பயன்படுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் நச்சு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். உங்களுக்குள் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டு வராமல் தடுப்பவர்கள் இவர்கள்தான்.

தனுசு

தனுசு

2022 கணிப்புகளின் படி தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு உங்கள் நிதிகளை சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். விரயம் செய்பவராக இருக்காதீர்கள். செலவுத் திட்டத்தை உருவாக்கி உங்கள் பணத்தைச் சேமிக்கவும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட வேண்டாம். உபயோகமான வேலைகளைச் செய்யுங்கள். உங்கள் கல்வி அல்லது உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் இலக்குகளை அடைவதை எதுவும் தடுக்க முடியாது.

கும்பம்

கும்பம்

மகர ராசியில் பிறந்தவர்கள் நாள் முழுவதும் வீட்டில் தங்கி வேலை செய்யாதீர்கள். விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள், புதிதாக ஒன்றை முயற்சிக்கவும், உங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் புதிய சாத்தியங்கள் மற்றும் புதிய யோசனைகளுக்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்

மீனம்

இந்த ஆண்டு அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை இழக்காதீர்கள். மீண்டும் ஒன்று சேர்வதன் மூலம் உங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக