
இணைய உலகத்தில் பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இதில் காணும் வீடியோக்களில் உள்ள பல விஷயங்கள் நம்மை, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
அந்த வகையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகராட்சி பகுதிகளிலும் அதிக அளவில் நாய்கள் உள்ளன. இந்த நாய்கள் சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடித்துவிடுவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக சாலைகளில் செல்பவர்களை துரத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்ககூடிய குழந்தைகளையும் நாய்கள் துரத்துவதால் குழந்தைகள் அச்சத்தில் ஓடி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். அத்துடன் சில நேரங்களில் குழந்தைகளையும் நாய்கள் கடித்து விடுகிறது.
மேலும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது நாய்கள் குறுக்கே வருவதால் ஏராளமானோர் கீழே விழுந்து பலர் காயமடைந்து வருகின்றனர்.
நாய்கள் வெறிப்பிடித்து திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் தொடை மற்றும் கால் பகுதிகளில் பயங்கரமாக கடித்தால், ரத்தம் பீரிட்டு ரத்தக் காயங்களுடன் அனைவருமே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து நாய்கடி ஊசி போட்டு சிகிச்சையில் உள்ளனர். நாய்கடி ஊசி அரசு மருத்துமனையில் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தாலும் நாய்களின அட்டகாசம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதுடன் பெரும் பீதியிலும் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றித் திரியும் வெறி நாய்களை பிடித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வெறி நாய் கடித்ததில் அதிக அளவு பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக