Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 டிசம்பர், 2021

மீண்டும் வரும் ஃபிளிப் மாடல்- இது வேற மாதிரி பாஸ்: நோக்கியா 2760 ஃபிளப் 4ஜி விவரக்குறிப்பு இதுதான்?

 நோக்கிய 2760 ஃபிளிப் 4ஜி சாதனத்தின் விவரக்குறிப்பு


நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த தகவலை பார்க்கையில், இது 4.33 x 2.28 x 0.76 அளவை கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனத்தின் எடை 4.8 அவுன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் காட்சி 240 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் 1450 எம்ஏஎச் பேட்டரி அளவு மூலம் ஆதரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி

சமீபத்திய அறிக்கையின்படி, நோக்கியா என்139டிஎல் ஃபிளிப் போன் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (எஃப்சிசி) தளத்தில் டிஏ-1398 என்ற மாதிரி எண் உடன் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தின் பெயர் நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஆக இருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானகு KaiOS மூலம் இயங்கக்கூடும். நோக்கியாவிடம் இருந்து வரவிருக்கும் ஃபீச்சர் போன் பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

நோக்கிய 2760 ஃபிளிப் 4ஜி சாதனத்தின் விவரக்குறிப்பு

நோக்கிய 2760 ஃபிளிப் 4ஜி சாதனத்தின் விவரக்குறிப்பு குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம். இந்த நோக்கியா 2760 ஃபிளிப் ஸ்மார்ட்போனானது 4.33 x 2.28 x 0.76 அங்குல அளவைக் கொண்டிருக்கும் எனவும் இதன் எடை 4.8 அவுன்ஸ் ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் காட்சி 240 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனானது 1450 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.8 மணிநேரம் பேச்சு நேரத்தையும், 13.7 மணிநேர வரையிலான காத்திருப்பு நேரத்தையும் ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

பின்புறத்தில் 5 எம்பி கேமரா

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 5 எம்பி கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா ஃபிளஇப் போனின் கூடுதல் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மல்டிமீடியா மெசேஜிங், ஹேண்ட்ஸ்ஃப்ரீ ஸ்பீக்கர், கலர் டிஸ்ப்ளே, எம்பி3 பிளேயர் ஆகிய ஆதரவோடு இது வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு திறன் குறித்த தகவல் இதுவரை எதுவும் இல்லை. இருப்பினும் எஸ்டி கார்டு மூலம் மெமரி விரிவாக்கம் செய்யலாம் என கூறப்படுகிறது.

KaiOS மூலம் இயக்கப்படும்

வரவிருக்கும் நோக்கியா 2760 சாதனமானது ஃபிளிப் 4ஜியின் இயங்குதளத்தை பொறுத்தவரை, நோக்கியா 6300, நோக்கியா 2720 ஃபிளிப், நோக்கியா 800 டஃப், நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 8110 ஆகியவற்றை பின்பற்றி அதே KaiOS மூலம் இயக்கப்படும் ஆறாவது சாதனமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனமானது சுவாரஸ்மானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஃபிளிப் போன் ரசிகர்களுக்கு ஃபிளிப் போன் அம்சத்தை மீண்டும் கொண்டு வரும் கவர்ச்சிகரமான பட்ஜெட் 4 ஜி போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக