Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

இனி மேல இல்ல கீழ: அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன்

அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் மோட்டோ எட்ஜ் 30 சிறப்பு மாறுபாடு

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 சாதனம் டிசம்பர் 9 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எ கூறப்படுகிறது. இது மட்டுமின்றி முன்னதாகவே நிறுவனம் சில சாதனங்களின் அம்சங்களை வெளியிட்டது. தற்போது மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 சாதனத்தின் சிறந்த மாறுபாட்டை நிறுவனம் கொண்டு வருகிறது. இது மோட்டோரோலாவின் முதல் ஸ்மார்ட்போனாக அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது.

அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் மோட்டோ எட்ஜ் 30 சிறப்பு மாறுபாடு

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 சிறப்பு பதிப்புக்கான படத்தை நிறுவனம் முன்னதாகவே வெய்போவில் வெளியிட்டது. இந்த போனின் சிறப்பு மாறுபாடானது அதே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மற்றும் 60 மெகாபிக்சல் செல்பி சென்சார் ஆகியவை உடன் ரும் என்பது வெய்போ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மாறுபாடானது அசல் மாறுபாட்டை போன்றே பஞ்ச் ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை என வெளியான படங்கள் காட்டுகிறது.

Moto Edge X30 சிறப்பு மாறுபாடு: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

அண்டர் டிஸ்ப்ளே கேமராவைத் தவிர சிறப்பு பதிப்பு ஆனது அதே அசல் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவுடன் வரும் எனவும் இது 6.67 இன்ச் ஓஎல்இடி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாதனத்தின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர்

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் சப்போர்டிங் லென்ஸ் உடன் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதும் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அல்லது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஐபி மதிப்பீடு, வைஃபை 6, ப்ளூடூத் 5.2 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 ஸ்பெஷல் வேரியண்ட்

மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 ஸ்பெஷல் வேரியண்ட் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30-ன் சிறப்பு பதிப்பானது நிலையான மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது இதன் விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சாதனம் சீனாவில் உள்ளூர் நேரப்படி டிசம்பர் 9 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு வெளியாகும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.

Moto Edge X30 சிறப்பு மாறுபாடு: இந்திய அறிமுகம்

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான மோட்டோ பொதுவாகவே சிறப்பு மாறுபாட்டை சொந்த நாட்டில் மட்டுமே அறிமுகம் செய்யும். எனவே சிறப்பு மாறுபாடு சீனாவிற்கு வெளியே வருமா இல்லை என்பது சந்தேகமா. இருப்பினும் மோட்டோ நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 சாதனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை 2022 முதல் காலாண்டில் நாட்டில் அறிமுகப்படுத்தும் எனவும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்தியாவில் வேறு பெயருடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக