Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

உங்க வீட்டுல இப்படியெல்லாம் நடந்திருக்கா?😜 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 ----------------------------------------------------------
சிரிப்போ சிரிப்பு...!!
----------------------------------------------------------
மனைவிகிட்ட நல்ல பேரு வாங்கலாம்னு, காலையில பால் காய்ச்ச ஸ்டவ்ல வெச்சுட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணினா... பால் பொங்கவே இல்ல...

அப்புறம் திறந்து பாத்தா, அது

இட்லி மாவு...

அப்புறம் பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை...

ஒரு கொலைக்காரன் கூட பொணத்தை மறைக்கப் இத்தனை பாடு பட்டிருக்கமாட்டான்.

----------------------------------------------------------
சிந்திக்க தெரியாத முட்டாள்...!!
----------------------------------------------------------

 ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்க தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான். ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான். வழியில் இருட்டி விட்டது.


எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனை பற்றி சிந்தித்து கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.

அவனும் சரி என்றான். சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான்? என்பதை சோதிக்க வெளியே வந்தார்.

அவனும், அரசே நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் 💫நட்சத்திரங்கள் தானாக வந்ததா? அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்...

நல்லது என்று கூறிச் சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான், அரசே கடலில் உப்பு தானாக வந்ததா? அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா?என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்....

அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் 'இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.

அவன் சொன்னான், 'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா? அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக