
இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் சென்னை மாவட்டம், கந்தகோட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
இத்திருக்கோயில் கந்தகோட்டம், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்கு சித்தி, புத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர்.
வேறென்ன சிறப்பு?
இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
தையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனை செய்யப்படுகிறது?
தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில் இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது.
தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர்.
குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள சித்தி, புத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிடுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக