Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 10 டிசம்பர், 2021

ஜனவரியில் போட்டிக்கு ரெடி: முதல் 5ஜி ஸ்மார்ட்போன், நோட் 11 சீரிஸ் விலை இதுதான்- முக்கிய தகவல் பாஸ்!

முதல் லேப்டாப் அறிமுகம்

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நோட் 11 சீரிஸ் 11 சீரிஸ் டிசம்பர் 13 அறிமுகமாகும் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அதன் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

முதல் லேப்டாப் அறிமுகம்

இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது முதல் லேப்டாப்பை அறிமுகம் செய்தது. இந்த பிராண்ட் தற்போது டிசம்பர் 13 ஆம் தேதி நோட் 11 மற்றும் நோட் 11 சீரிஸ் சாதனத்தை வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்திய வளர்ச்சியாக நிறுவனம் இந்தியாவிற்கு முதல் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக நோட் 11 மற்றும் நோட் 11 எஸ் சாதனங்களின் விலை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இன்பினிக்ஸ் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரியில் அறிமுகம்

Giznext உடனான நேர்காணலில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர்., ஜனவரி இறுதிக்குள் 5ஜி செயல்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனை நிறுவனம் கொண்டு வரும் என உறுதிப்படுத்தினார். அதேபோல் வரவிருக்கும் இன்பினிக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.15000 மற்றும் ரூ.20000 என்ற விலை பிரிவுக்கு இடையே அறிமுகமாகும் என உறுதிப்படுத்தினார். அதேபோல் இந்த சாதனம் மீடியாடெக் செயலி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதைத் தவிர இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்த எந்த தகவலையும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன்

5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இன்பினிக்ஸ் சாதனம் பிற பிராண்ட் சாதனமான போக்கோ மற்றும் ரியல்மி சாதனங்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்ப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கையில் இன்பினிக்ஸ் 5ஜி சாதனம் விலையும் இந்த சாதனங்களின் விலைப் பிரிவும் ஒப்பிடும் வகையில் இருக்கிறது. அதேபோல் இன்பினிக்ஸ் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி என அழைக்கப்படும் என சமீபத்தில் யூடியூப்பர் டெக் அரீனா24 தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி தகவல் ரெண்டர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

செல்பி கேமரா சென்சார்

செல்பி கேமரா சென்சாரை பொருத்த முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியும் இந்த தகவலில் காணப்பட்டது. இதில் குறிப்பிட தகுந்த அம்சம் என்னவென்றால் இதில் இரண்டு எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடன் மூன்று கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆதரவோடு வரும் எனவும் எஸ்அமோலெட் பேனலை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்

அதேபோல் ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இதில் வால்யூம் பட்டன்கள் சாதனத்தின் வலது பக்கத்தில் இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டம்

2022-ல் 5ஜி ஸ்மார்ட்போன்களை தவிர அடுத்த ஆண்டு முதல் பாதியில் சுமார் ஏழு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த பிராண்ட் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் 2022-ல் முதல் பாதியில் மற்றொரு லேப்டாப்பை கொண்டுவர பிராண்ட் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிறுவனம் இந்த விலைப்பிரிவை முறையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் சாதன அறிமுகத்தை விரிவுப்படுத்தும் வகையில் இன்பினிக்ஸ் 55 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.15000 விலைப்பிரிவு

இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் இந்திய விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 13 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் மாடல்கள் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் சாதனம் ரூ.15000 விலைப்பிரிவில் தான் இருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 11 விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் நோட் 11 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 1080x2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்டிபிஎஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 100000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 100 சதவீதம் டிசிஐ-பி3 வண்ண வரம்பு மற்றும் 91 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி வசதி

ஹூட்டின் கீழ் வெளியான தகவலின்படி, ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. நோட் 11 ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் ஏஐ லென்ஸ் உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, கூடுதலாக அமைப்பில் 2 மெகாபிக்சல் பொக்கே சென்சார் வசதி ஆகியவை இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16 மெகாபிக்சல் செல்பி வசதியைக் கொண்டுள்ளது. சாஃப்ட்வேர் அம்சத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் இன்ஃபினிக்ஸ் எக்ஸ்ஓஎஸ் 7.6 தனிப்பயன் உடன் இயங்குகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் இதில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக