
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி வசதி இல்லாததால் தொடர்ந்து திணறி வருகிறது, இதையே திமுக எம்பி தயாநிதி மாறனும் மக்களவையில் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவாக செயல்படுவதாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டியதால் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தயாநிதி மாறன் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடியும் என முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை 4ஜி சேவை கூட வழங்கப்பட வில்லை. இதனால் பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகிறார்கள். அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படமே வெளியிடப்பட்டது என்றார். இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்த குற்றச்சாட்டு தவறானது என்றனர்.
இறுதியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலையிட்டு மத்திய அமைச்சர் தெரிவித்த வார்த்தை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறி கேள்வி நேரம் என்பதால் உறுப்பினர்கள் குற்றம்சுமத்தாமல் தங்களது தொகுதி தொடர்பான விவகாரங்களை எழுப்பவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக