
ஒரு நாளைக்கு உங்களால் 50 ரூபாய் சேமிக்க முடியுமா? அப்படி எனினும் நிச்சயம் உங்களால் 50 கார்பஸினை உருவாக்க முடியும் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மிகப்பெரிய இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்த வழி என்பார்கள். அதுவும் உண்மை தான். உங்களது இலக்கினை அடைய இது தான் சிறந்த வழி. பங்கு சந்தைகள் சிறந்த வழி என்றாலும், அதில் அதே அளவு ரிஸ்க்கும் உண்டு. ஆக மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்த வழி. குறிப்பாக எஸ்.ஐ.பி இன்னும் சிறந்த ஆப்சன் எனலாம்.
தினசரி 50 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், மாதம் 1,500 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதன் மூலம் 12% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். தொடர்ந்து 30 வருடங்கள் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால். இதன் மூலம் 52.9 லட்சம் ரூபாய் கார்பஸினை அடைய முடியும்.
இதன் மூலம் 5.4 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் வருமானம் 47.5 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைக்கும். உதாரணத்திற்கு 20 வயதில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 50 வயதில் 50 லட்சம் ரூபாய் கார்ப்பஸினை உருவாக்கியிருப்பீர்கள்.
SIP மூலமாக முதலீடு செய்யும் போது நேரடியாக பங்கு சந்தை அபாயம் என்பது கிடையாது. இதிலும் ரிஸ்க் உள்ளது என்றாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது லாபகரமான திட்டங்களாகவே இருந்து வருகின்றது. ஆக நீண்டகால நோக்கில் பெரியளவிலான கார்பஸ் இலக்கினை அடைய இதுவே சிறந்த வழியாக இருக்க முடியும்.
மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரையில் கால வரம்புகள் கிடையாது. முதலீட்டு வரம்பு கிடையாது. ஆக உங்களால் முடிந்த அளவில் ஆரம்பத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம். இதன் மூலம் ஒரளவு லாபம் கிடைக்க ஆரம்பிக்கும்போது படிப்படியாக முதலீடுகளை அதிகரிக்கலாம். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுகாலம் என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக முதலீடு செய்யலாம். ஆக அதற்கேற்ப முதலீடுகளை திட்டமிடுவது நல்லது.
குறிப்பாக நீண்டகால நோக்கில் முதலீட்டு நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், அன்றாட சந்தை ஏற்ற இறக்கம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. குறிப்பாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொண்டால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் பார்க்கத் தேவையில்லை. ஆதலால் உங்கள் இலக்கினை அடைய சரியான வழி SIP தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக