Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 25 டிசம்பர், 2021

பிட்காயினுக்கு தடை.. சீனாவுக்கு கைகொடுத்த 50 நாடுகள்..!

 கிரிப்டோகரன்சி

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ முதலீட்டுச் சந்தைக்கு உலக நாடுகள் அதிகளவிலான ஆதரவு அளிக்கிறதோ, அதே அளவிற்கு எதிர்ப்பையும் காட்டி வருகிறது.

பல டெக் வல்லுனர்கள், தொழிலதிபர்கள் கிரிப்டோகரன்சி தான் பேமெண்ட் உலகின் எதிர்காலம் எனக் கூறி வரும் நிலையில், உலக நாடுகளின் அரசுக்கு இது பொருளாதாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் பெரும் ஆபத்து எனக் கூறிவருகிறது.

இந்த இரண்டு இடத்திலும் நிற்க முடியாத நாடுகள் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையை ஒழுங்கு முறைப்படுத்துவதில் இறங்கியுள்ளது.

கிரிப்டோகரன்சி

உலகளவில் கிரிப்டோகரன்சி உற்பத்தி முதல் வர்த்தகம் வரையில் தடை விதித்தது சீனா மட்டும் தான் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது, ஆனால் உலகில் சீனா உடன் சேர்த்து சுமார் 51 நாடுகள் கிரிப்டோகரன்சிக்குத் தடை விதித்துள்ளது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

51 நாடுகள் கிரிப்டோகரன்சி தடை

2021 டிசம்பர் 25 வரையில் உலகில் சுமார் 51 நாடுகள் கிரிப்டோகரன்சி மீது முழுமையாகவும், பகுதியாகவும் வர்த்தகத் தடை விதித்துள்ளது எனக் குளோபல் லீகல் ரிசர்ச் டைரெக்ட்ரேட் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு முதல் முறையாகக் கிரிப்டோகரன்சி மீது தடை விதித்த நாடுகள் பட்டியலில் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தற்போது இதன் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

தடை உத்தரவு

உலகில் இதுவரை 9 நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாகத் தடை விதித்து, 42 நாடுகள் implicit ban அதாவது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி சார்ந்து எந்த விதமான உதவிகளையும், சேவைகளையும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்தம் 51 நாடுகள் கிரிப்டோகரன்சி மீதான எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

2 மடங்கு வளர்ச்சி

2018ல் இதில் 23 நாடுகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 51 நாடுகளாக உயர்ந்துள்ளது. அல்ஜீரியா, பங்களாதேஷ், சீனா, எகிப்து, ஈராக், மொராக்கோ, நேபாளம், கத்தார் மற்றும் துனிசியா ஆகிய 9 நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு முழுமையான தடையை விதித்துள்ளது. இதில் சீனா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக