இந்த கோயில் எங்கு உள்ளது?
கரூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் என்னும் ஊரில் தேவர்மலையில் அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 30 கி.மீ தொலைவில் பாளையம் உள்ளது. பாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் குருணிகுளத்துப்பட்டி உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவர்மலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கிய நிலையில் சுமார் நான்கு அடி உயரத்தில் கதிர் நரசிங்க பெருமாள் காட்சியளிக்கிறார்.
மூலஸ்தானத்தின் அருகிலிருக்கும் மற்றொரு சன்னதியில் கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேவர்கள் உருவாக்கிய மோட்ச தீர்த்தம் இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோயிலில் மூலவர் இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையிலும், இடது கை அக்வான முத்திரை, வலது கை அபய முத்திரை, மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் வில்வமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெறுகின்றது.
இத்திருக்கோயிலில் ஆஞ்சநேயர் மற்றும் பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளது.
இத்தலத்தில் உள்ள மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது?
இக்கோயிலில் மார்கழி மாதத்தில் கருட சேவை, வைகாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
மேலும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணமாகாதவர்கள், கிரக தோஷம் உள்ளவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கதிர் நரசிங்கப் பெருமாளை பிரார்த்தனை செய்யலாம்.
சினம் தணிந்த சாந்த ஸ்வரூபியாக அருளும் கதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்து வழிபட்டால் மனதில் கோபம் என்பதே ஏற்படாது என்பது ஐதீகம்.
நீதிமன்ற வழக்கு உள்ளவர்கள் இங்கு வந்து மனமுருகி வழிபட்டால், வெற்றி நிச்சயம்.
கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சனைகள், மனம் தொடர்பான பிரச்சனைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்திருக்கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவுடன் மூலவரான கதிர் நரசிங்க பெருமாளுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக