Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 27 டிசம்பர், 2021

எடையுடைய வாசனைப் பொருள் எது? உங்களுக்கு பதில் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
--------------------------------------------------------------------

பூபதி : அண்ணே, உங்களை பாத்து ரொம்ப நாளாச்சு.. வாங்கண்ணே காபி சாப்பிட்டுட்டு போகலாம்..!
கணேஷ் : வேணாம்.. நான் அவசரமா வீட்டுக்கு போகணும்..!
பூபதி : என்னங்கண்ணே..! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டுல ஏதாச்சும் விசேஷங்களா?
கணேஷ் : விசேஷம் ஒன்னுமில்லை. என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்துக்கிட்டு இருப்பா..
பூபதி : இந்த காலத்துல இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற பொண்டாட்டியா! ஆச்சரியமா இருக்கே!
கணேஷ் : அட போங்க தம்பி! அவளாவது எனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருப்பதாவது. நான் போய் தான் அவளுக்கு சமைச்சு போடணும்..!
பூபதி : 😐😐
--------------------------------------------------------------------
நீதிபதி : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்றாங்க.. நீங்க இல்லன்னு சொல்றீங்க.. இதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா?
குற்றவாளி : ஐயா.. நான் என் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போயிக்கிட்டு இருந்தேன்.. நீங்களே சொல்லுங்க.. எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர வேகமா போவானா?
நீதிபதி : கேஸ் டிஸ்மிஸ்.. முதல்ல அவர விடுதலை செய்யுங்க..
குற்றவாளி : 😎😎
--------------------------------------------------------------------
சிந்தனை துளிகள்..!
--------------------------------------------------------------------
👉 புத்திசாலிக்கு அறிவு அதிகம் இருக்கலாம். ஆனால் முட்டாளுக்கு அனுபவம் அதிகம் இருக்கும்.

👉 நல்லொழுக்கம் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துப் போகும்.

👉 எதிரி எப்போதும் எதிரியே. நண்பன்தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்.
--------------------------------------------------------------------
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க...!!
--------------------------------------------------------------------
1. ஆகாயத்தையே சொந்தமாகக் கொண்ட பறவை எது?

2. ஆந்திர மக்களுக்கு பிடித்த விலங்கு எது?

3. எடையுடைய வாசனைப் பொருள் எது?

பதில் :

1. வான்கோழி.

2. கங்காரு.

3. கிராம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக