
சில வாரங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதன்பிறகு தற்போது தான் ஜியோ நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ரூ.2345 திட்டத்தில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த ரூ.2345 திட்டத்தில் 29 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்.
ஜியோ பயனர்கள் ரூ.2354 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் வேலிடிட்டி-க்கு பதிலாக 365 நாட்கள் வேலிடிட்டி-ஐபெறமுடியும் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த கூடுதல் வேலிடிட்டி நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறேவேண்டும்.
ஜியோவின் ரூ.2345 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறுபுதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தை தான் அறிமுகம்
செய்தது ஏர்டெல். இந்த புதிய திட்டம் கிட்டத்தட்ட அதிக நன்மைகளுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை இந்த புதிய திட்டத்தின்மூலம் பெற முடியும்.
ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான ஒரு மாதத்திற்கான இலவச சந்தா,ஷா அகாடமி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளுக்கு ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக