Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 27 டிசம்பர், 2021

வழக்கத்தை காட்டிலும் 1 லட்ச ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை!! 2021 நவம்பர் மாத விற்பனை நிலவரம்!

வழக்கத்தை காட்டிலும் 1 லட்ச ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை!! 2021 நவம்பர் மாத விற்பனை நிலவரம்!

மற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை போன்று, ஹோண்டா 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனையும் கடந்த 2021 நவம்பர் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. ஹோண்டாவின் கடந்த மாத விற்பனை குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 2,56,174 2-வீலர்ஸை ஹோண்டா இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 நவம்பரை காட்டிலும் சுமார் 37.92% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 4,12,642 இருசக்கர வாகனங்களை இந்த ஜப்பானிய 2-வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

இருப்பினும் ஹோண்டாவின் ஏற்றுமதி வழக்கம்போல் கடந்த மாதத்தில் சிறப்பானதாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஹோண்டா இருசக்கர வாகனங்களும் எதிர்மறையான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளன. இந்த வரிசையில் வழக்கம்போல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தம் 1,24,082 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 நவம்பரை காட்டிலும் சுமார் 1 லட்ச யூனிட்கள் குறைவாகும். அதாவது, அந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் ஏறக்குறைய 1 லட்ச ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. சதவீதமாக பார்த்தோமேயானால், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 45.05% சரிந்துள்ளது.

இந்தியாவில் மொத்த ஹோண்டா 2-வீலர்ஸ் விற்பனையில் கிட்டத்தட்ட 48.44% பங்கை கொண்டுள்ள ஆக்டிவா 125 மாடலில் சமீபத்தில் தான் ரூ.78,725 என்கிற விலையில் பிரீமியம் எடிசனை தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் வரும் மாதங்களிலாவது ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் 11.43% வருடம்-வருடம் விற்பனை வீழ்ச்சியுடன் சிபி ஷைன் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 83,622 சிபி ஷைன் பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்மையில் மற்ற ஹோண்டா இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிபி ஷைன் பைக்குகளின் உள்நாட்டு விற்பனையில் பெரிய அளவில் சரிவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

2020 நவம்பர் மாதத்தில் 94,413 சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. யுனிகார்ன் 160 இந்த வரிசையில் 15,555 யூனிட்களின் விற்பனையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 21,796 யுனிகார்ன் 160 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2020 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 28.63% குறைவாகும். டியோ இந்த வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த மாத டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை 8,522 மட்டுமே ஆகும். சமீப மாதங்களாக டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை பெரிய அளவில் பாராட்டக்கூடியதாக இல்லை. ஏனெனில் 2020 நவம்பரில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 75.52% அதிகமாக 34,812 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன என்றால் நம்ப முடிகிறதா?

இதில் இருந்து டியோ ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு இளம் தலைமுறையினரின் மத்தியில் குறைந்து வருகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. ஹோண்டா ட்ரீம் பைக் இதற்கடுத்து 7,956 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதுவே இந்த ஹோண்டா பைக்கின் 2020 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 10,875 ஆகும். இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தில் உள்ள லிவோ பைக்குகளும் ட்ரீம் மாடலுக்கு இணையாக, 7,416 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்கள் கடந்த நவம்பரில் 5,448 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தை பிடித்துள்ளது. 2020 நவம்பரை காட்டிலும் கடந்த நவம்பரில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த ஒரே ஹோண்டா 2-வீலர் மாடல் கிரேஸியா ஆகும். ஏனெனில் அந்த மாதத்தில் 4,675 கிரேஸியா ஸ்கூட்டர்களையே ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் ஸ்டைலிஷான ஸ்கூட்டராக வர்ணிக்கப்படும் கிரேஸியாவின் விற்பனை 16.53% அதிகரித்துள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹைனெஸ் சிபி350 கடந்த மாதத்தில் 2,322 யூனிட்களும், ஹோண்டாவின் சமீபத்திய அறிமுகமான சிபி200எக்ஸ் அட்வென்ச்சர் பைக் 1,247 யூனிட்கள் விற்கப்பட்டு இந்த லிஸ்ட்டில் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக