Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 24 டிசம்பர், 2021

கியூபா நாட்டின் பணவீக்கம் 70 சதவீதமாக உயர்வு.. வரலாறு காணாத நிலை..!

இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் 2021-22ஆம் நிதியாண்டுக்கு 5.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், நாட்டில் விலைவாசி நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனை உடனடியாகக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கியூபாவில் 70 சதவீதம் பணவீக்கம் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

கியூபா நாட்டின் பணவீக்கம்

கியூபா நாட்டின் பணவீக்கம் 2021ஆம் ஆண்டின் முடிவில் 70 சதவீதமாக இருக்கும் எனவும், இந்த உயர்வுக்குப் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை மற்றும் இறக்குமதி பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு தான் காரணம் என அந்நாட்டில் நாடாளுமன்றத்தில் கியூபா நாட்டின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சரான அலெஜான்ட்ரோ கில் அறிவித்தார்.

அமைச்சர் அலெஜான்ட்ரோ கில்

மேலும் அலெஜான்ட்ரோ கில் தற்போது இருக்கும் 70 சதவீத பணவீக்கத்தை அடுத்த வருடம் 60 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ஜனவரி மாதம் புதிய பொருளாதார நடவடிக்கைகளைத் திட்டமிட்டு உள்ளதாகவும், குறிப்பாக இரண்டு அடுக்கு நாணய முறைக்குத் தடையும், முக்கியப் பொருட்களுக்கான விலையும் உயர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சரான அலெஜான்ட்ரோ கில்.

பெரும் சவால்

2022ல் பணவீக்கத்தைக் குறைப்பது தான் நாட்டின் பெரும் சவாலாக இருக்கும் எனவும் அலெஜான்ட்ரோ கில் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாத நாடாளுமன்ற கூட்டத்தில் அலெஜான்ட்ரோ கில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை மூலம் வகைப்படுத்தாத சந்தையில் பொருட்களின் விலை 6,900 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை

இந்த மோசமான நிலைக்குக் கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையும் முக்கியமாகக் காரணம் என்றும் அலெஜான்ட்ரோ கில் தெரிவித்துள்ளார், அமெரிக்காவின் தடையால் பல ஆயிரம் கண்டெயினர் பொருட்கள் கியூபா நாட்டிற்கு டெலிவரி செய்யப்படாமலே கடலில் சிக்கியுள்ளது.

பொருட்களின் டிமாண்ட்

இதனால் பொருட்களின் டிமாண்ட் காரணமாக அதன் விலை அதிகரித்துப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார் கியூபா நாட்டின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சரான அலெஜான்ட்ரோ கில்.

பொருளாதார வளர்ச்சி கணிப்பு

அமெரிக்கத் தடையால் கியூபா நாட்டின் சுற்றுலா துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ல் இந்நாட்டின் பொருளாதாரம் 11 சதவீதம் சரிந்தது, 2021ல் 2 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் 2022ல் 4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைய முடியும் எனக் கணித்துளளார் அலெஜான்ட்ரோ கில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக