அதேநேரத்தில்
முறையாக இதனை பராமரித்தோமேயானால் இதன் ஆயுட்காலத்தை நம்மால் நீட்டிக்க
முடியும். அதேவேலையில், டிரைவ் பெல்ட் விரைவில் பழுதாக இருக்கின்றதால் சில
சமிக்ஞைகள் வெளியாகும். அவற்றைக் கொண்டு டிரைவ் பெல்டில் பிரச்னை
ஏற்பட்டிருக்கின்றது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள முடியும்.
அப்படியா?
அது என்ன அறிகுறி? அப்படினு கேக்குறீங்களே, இதுகுறித்த தகவலைதாங்க இந்த
பதிவில நாங்க வழங்கியிருக்கின்றோம். டிரைவ் பெல்ட் தோல்வி அடையும் முன்பு
வெளிப்படக் கூடிய ஐந்து அறிகுறிகள் பற்றிய தகவல் இப்பதிவில் தொகுத்து
வழங்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் அவை பற்றிய தகவலைக் காணலாம்.
ஏசி கோளாறு
முன்னதாக
நாங்கள் கூறியதைப் போலவே ஏசி இயக்கத்தில் பெரும் பங்கினை டிரைவ் பெல்ட்
வகிக்கின்றது. இதில், ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும் ஏசி போதுமானதாக வேலை
செய்யாது. எஞ்ஜினில் இருந்து நேரடியாக டிரைவ் பெல்டுகள் இயக்கத்தை கடத்தி
ஏசி கருவியை இயங்க செய்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் டிரைவ்
பெல்டில் ஏதேனும் சேதம் அல்லது பழுது ஏற்படுமானால் அது நேரடியாக ஏசி
இயக்கத்தைப் பாதிக்கச் செய்கின்றது.
எஞ்ஜினில் சத்தம் வெளியேறுதல்
நம்மில்
பலர், குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்கள் சிறு வயதில் மாவு அரைக்க மாவுமில்லிற்கு
சென்றிருப்பீர்கள். அங்கு, மிளகாய் அரைக்க, சிகைக்காய் அரைக்க மற்றும்
அரிசி போன்ற தானியங்கள் அரைக்க என தனி தனி எந்திரங்கள்
வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவையனைத்திற்கும் சேர்த்து ஒன்று அல்லது
இரண்டு மோட்டார்களே இருக்கும். இவற்றின் வாயிலாகவே தேவைக்கேற்ப பெல்ட்
மாற்றப்பட்டு மாவு கிரைண்டர்கள் இயக்கப்படும்.
அவ்வாறு
தொடர்ச்சியாக மாற்றி இயக்குவதனாலும், தொடர் இயக்கத்தின் காரணத்தினாலும்
அந்த பெல்டிற்கு போதுமான பிடிமானம், அது உட்காரும் இடத்தில் கிடைக்காது.
இதன் விளைவாக கடும் சத்தம் ஏற்படும். இதுபோன்ற ஓர் சத்தமே எஞ்ஜினில்
இருந்து அணில் கத்துவதைப் போல எழும்பும். இதுபோன்ற சத்தம் வருமானால் அது
நிச்சயம் டிரைவ் பெல்ட் சேதத்தையே குறிக்கும்.
எஞ்ஜினில் அதிக வெப்பம் வெளியேறுதல்
டிரைவ்
பெல்ட் ஏசியை மட்டும் அல்ல வாட்டர் பம்பையும் இயக்குகின்றது. இதன் வாயிலாக
எஞ்ஜின் விரைவில் வெப்பமடைவது தடுக்கப்படுகின்றது. இத்தகைய
செயல்பாட்டிலேயே பழுதான டிரைவ் பெல்ட் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால்,
வழக்கத்திற்கு மாறாக எஞ்ஜினில் இருந்து வெப்பம் வெளியேறும். எனவே உங்கள்
காரில் இருந்து அதிகம் வெப்பம் வெளியேறுமானால் உடனடியாக டிரைவ் பெல்டை ஒரு
முறை பரிசோதித்துவிடுங்கள்.
பளமான சேதங்கள்
டிரைவ்
பெல்டுகள் சில நேரங்களில் வெளிப்படையாக அதன் சேதத்தைக் காண்பிக்கும்.
அதாவது, பழுதான டயர்கள் போன்று அது உடைந்தோ அல்லது சிதிலமடைந்தோ தென்படும்.
இதுமாதிரியான நேரங்களில் உடனடியாக டிரைவ் பெல்டை மாற்றுவதே சிறந்த
வழியாகும். எந்தவொரு சத்தமும் இல்லாமல் இதுமாதிரியான சேதங்கள் அரங்கேறும்
என்பது குறிப்பிடத்தகுந்தது.
பவர் ஸ்டியரிங் இயக்கத்தில் குறைபாடு
பவர்
ஸ்டியரிங் வழக்கத்திற்கு மாறாக செயல்படுகின்றது என்றாலும் டிரைவ் பெல்டில்
கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்றே அர்த்தம். ஆம், பவர் ஸ்டியரிங்
இயக்கத்திலும் டிரைவ் பெல்டுகள் பங்காற்றுகின்றன. ஆகையால், இதில் ஏதேனும்
சிக்கலை சந்திக்கின்றீர்கள் என்றால் உடனடியாக பெல்டை ஆய்வு செய்து
பார்க்கவும்.
டிரைவ்
பெல்ட்டில் பழுது கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக மாற்றுவது நல்ல. இந்த
மாற்றத்திற்கு அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளாது என்பது
குறிப்பிடத்தகுந்தது. மெக்கானிக்குகள் இதனை சில மணி நேரங்களில் சரி செய்து
கொடுத்துவிடுகின்றனர். ஆகையால், இதை தள்ளி போட வேண்டாம் என்பதே எங்களுடையது
மட்டுமல்ல வாகன துறை வல்லுநர்களின் அறிவுறுத்தலும்கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக