Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 டிசம்பர், 2021

வெறும் ரூ.94- திட்டத்தில் அதிக நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

சமீபத்தில் ஜியோ, வோட

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் சில திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்நிறுவனம் விரைவில்
அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டு வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

சமீபத்தில் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் இப்போதும் கூட அதிக நன்மையை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த STV_94 திட்டமானது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் ரூ.94-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் 60 நாட்களுக்கு இலவச காலர் ட்யூன் சேவையை பெறமுடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும், பின்பு இது டெய்லி லிமிட் எதுவும் இல்லாமல் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 75 நாட்களில் எப்போது வேண்டுமானதும் இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 100 நிமிடங்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க் மற்றும் நாட்டில் உள்ள வேறு ஏதேனும் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் ஒருவருடன் பேசும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். பின்பு இது காலாவதியான பிறகு வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 30 பைசா என்கிற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக