Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 டிசம்பர், 2021

முக்கியாமான 5 ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ரிலையன்ஸ் ஜியோ.!

 போது திருத்தப்பட்ட 5 தி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மேலும் ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக இப்போது விலை உயர்த்தப்பட்ட திட்டங்கள் அனைத்துமே ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது திருத்தப்பட்ட 5 திட்டங்கள் சுமார் 20விலை சதவிகிதம் உயர்வை பெற்றுள்ளது. மேலும் அந்த திட்டங்களின் பழைய விலை மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? போன்ற அனைத்து தகவல்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா,ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம்

டேட்டா-ஒன்லி பேக் ஆன ரூ.549 திட்டத்தையும் திருத்தியுள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி இந்த திட்டம் தற்போது ரூ.659-க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா,ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக