Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 25 டிசம்பர், 2021

மனைவி ஒரு தீர்க்கதரிசி... சிரிக்கலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

--------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
--------------------------------------------------

கோபு : அந்த போட்டோகிராபருக்கு என்ன கொழுப்பு பாத்தியா?
பாபு : ஏன் என்னாச்சு?
கோபு : உங்க சைசுக்கு உங்களை ஸ்டுடியோ கேமரா மூலமா எடுக்க முடியாது, சாட்டிலைட் மூலமா தான் எடுக்க முடியும்னு சொல்றான்.
பாபு : 😆😆
--------------------------------------------------
மேனேஜர் : இந்த இன்டெர்வியூவை நீங்க அட்டென்ட் பண்ணினதுக்கு என்ன எதிர்பாக்குறீங்க?
தினேஷ் : லஞ்ச் அலவன்ஸ் மட்டும் கொடுங்க சார்! சாய்ங்காலம் டிபனுக்கு வேற கம்பெனி இன்டெர்வியூ இருக்கு!
மேனேஜர் : 😳😳
--------------------------------------------------
மனைவி ஒரு தீர்க்கதரிசி...!!
--------------------------------------------------
ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான். அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து, 'ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான். சரி... என்று அவனுடன் நடந்தான்.

வழியில் அவனுடைய செருப்பு 'சரக்" என அறுந்தது.

அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

'டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடுற?" என்று சிரித்தான் நண்பன்.

'அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.

ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் நண்பன்.

காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்"-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு...😂😂
--------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக