------------------------------------------
வாங்க சிரிக்கலாம்...!!
------------------------------------------டாக்டர் : வாங்க, உட்காருங்க, சட்டைய கழட்டுங்க, வாயை திறங்க, நாக்க நீட்டுங்க, திரும்பி உட்காருங்க, இழுத்து மூச்சு விடுங்க... இப்ப சொல்லுங்க என்ன செய்யுது?
நோயாளி : ஒன்னுமில்லை டாக்டர், என் மகளுக்கு கல்யாணம்... பத்திரிக்கை கொடுக்க வந்தேன்...
டாக்டர் : 😅😅😅
------------------------------------------
பாபு : டாக்டர்... வெயில்காலம்... ரொம்ப புழுக்கமா இருக்குது ஐஸ் கட்டியிலேயே இருக்கணும் போல இருக்குது...
டாக்டர் : அவசரப்படாதீங்க... அதெல்லாம் ஆபரேஷனுக்கு அப்புறம்... ஐஸ் கட்டி என்ன... ஐஸ் பெட்டிலேயே வெச்சுக்கலாம்...
பாபு : 😂😂
------------------------------------------
அன்னாசிப்பழம்...!!
------------------------------------------

🍍அன்னாசிப்பழத்தில் உள்ள தாது பொருட்கள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கின்றன.
🍍அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
------------------------------------------பொன்மொழிகள்...!!
------------------------------------------
முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்!
இன்றைய நாள் கடினமாக இருக்கலாம்,
நாளைய நாள் மிகக் கடினமாக கூட இருக்கலாம்,
ஆனால் நாளை மறுநாள்
உங்கள் வாழ்க்கையை மாற்றும் புதியதொரு விடியலாக மாறும்.
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே... அது உன்னை கொன்று விடும்
கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்...!
------------------------------------------
விடுகதைகள்...!!
------------------------------------------
🕢 இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்... அது என்ன?
🔘 அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம்... அது என்ன?
🔥 வாலால் நீர் குடிக்கும், வாயால் பூச்சொரியும்... அது என்ன?
------------------------------------------
விடை:
------------------------------------------
🕢 கடிகாரம்
🔘 வளையல்
🔥 விளக்கு
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக