
இந்த கோவில் எங்கு உள்ளது?
அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில் சென்னை, அம்பத்தூரில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு எப்படி செல்வது?
இந்த கோவிலானது அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உள்ள ஓம்சக்தி நகரில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல அம்பத்தூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோவிலின் சிறப்புகள் என்ன?
அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர்.
தமிழ்த்தெய்வமான முருகன், உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற குழந்தை இலக்கியங்களை அளித்த தமிழ் மூதாட்டி ஒளவையார் ஆகியோருக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது சிறப்பம்சம்.
இசக்கியம்மன் இடது கையில் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்தவாறும், வலது கையை ஓங்கியபடி சூலத்தை ஏந்தியவாறும் உள்ளார்.
வெற்றி விநாயகர், துர்க்கை, மகாவிஷ்ணு, முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரக சந்நிதிகளும் உள்ளன.
வேறென்ன சிறப்பு?
இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடி மாதம், சித்திரை மாதம், நவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.
என்னென்ன பிரார்த்தனை செய்யலாம்?
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.
மாதவிடாய் பிரச்சனையுள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட்டால் அப்பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கையாகும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக