
இந்த கோயில் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி என்னுமிடத்தில் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நிலக்கோட்டையிலிருந்தும், உசிலம்பட்டியிலிருந்தும், சோழவந்தான் மன்னாடிமங்களம் வழியாகவும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார்.
அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவகிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பசாமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
அனுமன் ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.
அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம் வருகின்றனர்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யலாம்?
வீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்க பிரார்த்தனைகள் செய்கின்றனர்.
பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம்.
ஆஞ்சநேயர் பாடல்கள் பாடியும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றியும் நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக