Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 17 டிசம்பர், 2021

வெங்காயமும், பெருங்காயமும் எப்போது ஒன்று கூடும்? கொஞ்சம் யோசிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
------------------------------------------------------
கணவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க...
மனைவி : சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போயிடும்.
கணவன் : ஓகே... அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுறேன்.
மனைவி : 😖😖
------------------------------------------------------
ஆசிரியர் : 10ஆம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது?
மாணவி : அப்பவும் உலகம் உருண்டையாதான் இருந்தது சார்..!!
ஆசிரியர் : 😐😐
------------------------------------------------------
சிறந்த வரிகள்..!
------------------------------------------------------
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
------------------------------------------------------
இது வேடிக்கைக்காக மட்டுமே..!!
------------------------------------------------------
குத்துச் சண்டை வீரருக்கு பிடித்த விளக்கு எது? - குத்து விளக்கு

வெங்காயமும், பெருங்காயமும் எப்போது ஒன்று கூடும்? - சாம்பார் வைக்கும்போது

யார் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்வார்கள்? - 59 கல்யாணங்கள் செய்து முடித்தவர்கள்.

பொய் சொல்லும் ஆங்கில மாதம் எது? - ஜூ 'லை"

காட்டில் வசிக்காத புலி எது? - அம் 'புலி"
------------------------------------------------------
படித்ததில் சிரித்தது!
------------------------------------------------------
ஒரு நடு இரவில் தன் மனைவியின்செல் போனில் 'பீப்" சத்தம் கேட்டது. கணவர் எழுந்து, அந்த செல்போனைப் பார்த்து விட்டு, தன் மனைவியிடம் கோபமாக 'யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல்  என்று சொல்லுறது?" என்று கத்தினார். 

மனைவி, 'அட.. யாருடா அது.. நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே.. அது யாருன்னு பார்ப்போம்.." என்று ரொம்ப சந்தோஷமா எழுந்து வந்து தன் செல்போனைப் பார்த்தாள்.

உடனே கோபத்துடன் அவரைவிட சத்தமாக கத்தினாள்.. அட லூசு புருஷா.. மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு.. இது பியுட்டிஃபுல் இல்லை.. பேட்டரிஃபுல்  என்று.
------------------------------------------------------
இது உண்மைதானே...!!
------------------------------------------------------
கோழி குஞ்சு தாயிடம் கேட்டது

'மனிதர்கள் தங்கள் குழந்தைகள் பிறந்ததும் பெயர் வைக்கிறார்கள், நமக்கு மட்டும் ஏன் பெயர் வைப்பதில்லை?"

அதற்கு கோழி சொன்னதாம் 'நாம் இறந்த பின் பெயர் வைப்பார்கள்",

சிக்கன் 65
சிக்கன் ஃபிரை
சில்லி சிக்கன்
சிக்கன் குருமா
சிக்கன் கறி என்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக