>>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • >>
  • 14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 2 டிசம்பர், 2021

    படிப்பை எதிர்ப்போம்... ரெஸ்ட் எடுப்போம்.. சிந்திக்க மட்டும் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------------------
    கணவனும், மனைவியும் 👫 விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனாங்க...

    நீதிபதி 👤 : உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்காங்க... எப்படி பிரிச்சிப்பீங்க?

    ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா 🙅 ஆலோசனை செஞ்சாங்க...

    கடைசியில் கணவன் 👨 சொன்னான் சரி சார், அடுத்த வருடம் 📆 நாங்க இன்னொரு குழந்தையோட 👶 வரோம். 

    நில்லுங்க💁... இன்னும் ஜோக் முடியல😜.... 9 மாசம் கழிச்சு📅...

    அவங்களுக்கு இரட்டை குழந்தை 👶 பிறந்தது...😎😇 

    -------------------------------------------------
     சிந்திக்க மட்டுமே...!!
    -------------------------------------------------
    ⚡ படிப்பு அறிவு தரும்...

    ⚡ அறிவு பணம் தரும்...

    ⚡ பணம் திமிரை தரும்...

    ⚡ திமிரு ஆணவம் தரும்...

    ⚡ ஆணவம் அழிவை தரும்...

    ⚡ அதனால், 

    படிப்பை எதிர்ப்போம்... ரெஸ்ட் எடுப்போம்...!

    -------------------------------------------------
     புத்திசாலி மாமியார்!!!
    -------------------------------------------------
    தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனைவி தனலட்சுமியிடம், 'உன் மருமகளுக்கு ஃபோன் பண்ணிடு" என்றார் முத்துசாமி.

    'எதுக்கு."

    'இங்கே வந்து ரொம்ப நாளாச்சி. பேரப்பிள்ளைகளைப் பார்க்கணும்னு தோனலையா? வந்து ஒரு மாசம் இருந்துட்டுப் போங்கன்னு சொல்லிட்டே இருக்கான் நம்ம புள்ள. நாளை சென்னை கிளம்புவோம். விஷயத்தை அவளுக்கு சொல்லிடு" என்றார் முத்துசாமி.

    ஊருக்கு வர்றோம்னு சொன்னா பதிலே சொல்லாம ஃபோனை வெச்சுடுறா. அவனுக்கு சொன்னா போதாதா? என்றாள் தனலட்சுமி.

    போதாது. அவ ரோசக்காரியாச்சே. அவன் வேலைக்குப் போனதும் வீட்டைப் பூட்டிட்டுப் போயிடுவா. நாம வாசப்படியில் காத்துக் கிடக்கணும். இப்பவே ஃபோன் பண்ணிடு.

    அலைப்பேசியை உயிர்ப்பித்து, 'நாளை கழிச்சி நானும், மாமாவும் அங்கே வர்றோம். அது வந்தும்மா... இங்கே ரெண்டு மூனு கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருக்கு. ரெண்டு நாள் மட்டும் தங்கிட்டு ஊர் திரும்பிடுவோம்."

    'சரிங்க அத்தை" என்றாள் மருமகள் வினிதா.

    பேசி முடித்து அலைப்பேசியை அணைத்தபோது முத்துசாமி சிரித்தார்... கல்யாண அழைப்பு இருக்குன்னு எதுக்குப் பொய் சொன்ன? என்று கேட்டார்.

    நாம ரெண்டு நாள்தான் இருப்போம்னு முன்கூட்டியே சொல்லிட்டா, கொஞ்சம் மரியாதை கொடுத்து உபசரிப்பா. சொல்லலேன்னா, நாள் கணக்கில் கேம்ப் போட்டுவோமோன்னு முகம் கொடுத்துப் பேசமாட்டா. உபசரிப்பும் படு மட்டமா இருக்கும் என்றாள் தனலட்சுமி. 

    'நீ ரொம்பத்தான் புத்திசாலி..." என்று மனைவியைப் பாராட்டினார் முத்துசாமி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக