
முக்கிய சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 18 வயது நிரம்பிய குடிமகன்கள் வாக்களிக்க தங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர்கள் பதிவு செய்ய நான்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தனிநபர்கள் தேசிய வாக்காளர் சேவை இணையதளம், குறுஞ்செய்தி, தொலைபேசி அல்லது தங்கள் பகுதியில் உள்ள சாவடி அளவிலான அலுவலர்களை பார்வையிடுவதன் மூலம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் தங்கள் ஆதார் எண்களை இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுக்க முடியும் என்றும், ஒரே வாக்காளர்கள் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்திருப்பதை தடுக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல்தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் வழியாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்ட்டை இணைப்பது எப்படி
https://voterportal.eci.gov.in/ என்ற போர்ட்டலை அணுகவும்
உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வாக்காளர் அடையாள எண் ஆகியவற்றை பயன்படுத்தி போர்ட்டல் உள் நுழையவும். இந்த போர்ட்டலுக்குள் உள்நுழைந்தவுடன் தங்களது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கணக்கு இல்லாத பட்சத்தில் இந்த தகவல்களை வழங்கி கணக்குகளை தொடங்கலாம்.
அதன்பின், உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் தந்தை பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டும்.
தற்போது உள்ளிடப்பட்ட விவரங்கள் அரசாங்கத்தின் தரவுத் தளத்துடன் சரியாக பொருந்தினால் தேடல் பட்டனை கிளிக் செய்யவும் பின் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
பதிவு செய்யப்பட்டதை குறிக்கும் அறிவிப்புதிரையின் இடது பக்கத்தில் "ஃபீட் ஆதார் எண்" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
நீங்கள் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு அனைத்தையும் முறையாக சரிபார்த்து, சமர்ப்பி என்ற பட்டனை கிளக் செய்ய வேண்டும்.
இறுதியாக வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதை குறிக்கும் அறிவிப்பு திரையில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்எம்எஸ் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்ற தகவல்களை பார்க்கலாம். உங்கள் மொபைலில் தங்கள் மெசேஜ் தேர்வை திறந்து, 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
தொலைபேசி மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கலாம், உங்கள் வாக்காளர் ஐடியுடன் உங்கள் ஆதாரை இணைக்க, நீங்கள் அழைப்பு மையத்திற்கு ஃபோன் செய்யலாம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டயல் செய்ய வேண்டும். டயல் செய்ய வேண்டிய எண் ஆனது 1950 ஆகும். இந்த எண்ணுக்கு டயல் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைக்க இரண்டையும் வழங்க வேண்டும்.
சாவடி நிலை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்சாவடிக்கு சென்றும் தங்கள் ஆதார் அடையாள அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம். உங்கள் அருகில் உள்ள சாவடி நிலை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பகிரவும். சாவடி அலுவலர் தகவலை இருமுறை சரிபார்த்து கூடுதல் சரிபார்ப்பிற்காக உங்கள் இருப்பிடத்திற்கு அவர் நேரடியாக வருவார். இந்த நடவடிக்கை முடிந்ததும் பதிவுகள் தொடங்கப்படும்.
https://voterportal.eci.gov.in/ என்ற தளத்துக்கு செல்ல வேண்டும். 'Seeding through NVSP Portal' பிரிவில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். அதில் சமர்பிக்கப்பட்ட மற்றும் தற்போது செயல்படுத்தப்படும் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு காட்டப்படும். மேலும் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க அதிகாரப்பூர்வ https://uidai.gov.in/ இணையதள அணுகல் காண்பிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக