Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 டிசம்பர், 2021

PAN திருத்தம்: வீட்டில் இருந்தபடி ஆன்லைன், ஆப்லைன் மற்றும் போன் மூலம் திருத்தம் செய்வது எப்படி? ஈசி டிப்ஸ்..

PAN கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை எப்படி மாற்றம் செய்யலாம்?

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் எப்படி ஆதார் அடையாள அட்டை மிக முக்கியமானதோ, அதைப் போல் இந்திய மக்கள் அனைவருக்கும் பான் அட்டை மிகவும் முக்கியமானது. ஆதார் அட்டை, வாகன லைசன்ஸ் அடையாள அட்டை போன்று நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான ஆவணங்களில் பான் கார்டு அடையும் மிக முக்கியமான அடையாள அடையாகும். இந்த PAN கார்டு அட்டைகள் உங்களின் நிதி வரலாறு விபரங்களைக் கொண்டது என்பதனால் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

PAN கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை எப்படி மாற்றம் செய்யலாம்?

சரி, இப்படி மிக முக்கியமான அடையாள அட்டையில், அதாவது உங்கள் PAN கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை எப்படி மாற்றம் செய்யலாம் என்று பார்க்கலாம். அதுவும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே அதை எப்படி ஆன்லைன் மூலம் சரி செய்து மாற்றம் செய்யலாம் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஆன்லைன் எல்லாம் வேண்டாம் சார்,நேராகச் சென்று மாற்றம் செய்யக் கூட என்னிடம் நேரம் இருக்கிறது ஆனால், எங்குச் சென்று எப்படி மாற்றம் செய்வது என்பது தான் தெரியவில்லை என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கும் இந்த பதிவில் செயல்முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு எந்த முறையில் பான் அட்டை விபரங்களை மாற்றம் செய்வது சுலபமானது?

உங்களுக்கு எந்த முறையில் உங்கள் பான் அடையாள அட்டையில் இருக்கும் தவறுகளை மாற்றம் செய்துகொள்ளச் சுலபமாக இருக்கும் என்பதை அறிந்து தேர்வு செய்துகொள்ளுங்கள். PAN கார்டு அட்டை என்பது வங்கியில் கணக்கு தொடங்கவும், பி.எஃப்-க்கு விண்ணப்பிக்கவும், வங்கிகளிடம் இருந்து கடனுக்கு விண்ணப்பிக்கவும், உங்களின் சிவில் மதிப்பெண்ணைச் சரி பார்க்கவும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி எல்லா இடங்களிலும் பணம் தொடர்பான வேலைகளைச் செய்து முடிக்க உங்கள் கையில் பான் கார்டு இருப்பது கட்டாயம்.

பான் கார்டு எப்போதெல்லாம் கட்டாயமானது?

வங்கிக் கணக்கில் இருந்து செலான் மூலம் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தாலும், பான் கார்டு விபரங்களை அத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அத்தகைய சூழ்நிலையில், பான் கார்டின் அவசியத்தைப் புரிந்துகொண்டு, அனைவரும் அதைப் பெறுகிறார்கள். ஆனால், உங்கள் பான் கார்டில் உங்கள் பெயர் அல்லது வேறு ஏதேனும் தகவலில் தவறு நடந்ததாக நீங்கள் நினைத்தால் அல்லது ஏதாவது மாற்ற விரும்பினால் அதை எளிதாகச் செய்து முடிக்க வலிகள் உள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மற்றும் போன் மூலம் திருத்தும் செய்யும் முறைகள்

அதைப் பற்றித் தான் இப்போது நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். எனவே பான் கார்டில் உள்ள பிழைகளை எப்படி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மற்றும் போன் மூலம் தொடர்பு கொண்டு திருத்தம் செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த பதிவை இறுதி வரை படியுங்கள். முழு செயல்முறை விபரம், நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அவசர உதவி எண், தகவலை மாற்றம் செய்யத் தேவைப்படும் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தின் விபரம் போன்ற முக்கிய தகவல்கள் செயல்முறையுடன் கீழே 

இந்த இரண்டு வழிகளிலும் உங்கள் PAN கார்டு விபரங்களைத் திருத்தம் செய்யலாமா?

உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதைத் திருத்திக் கொள்ள நமது இந்திய அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. இதற்காக நீங்கள் அதை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆஃப்லைன் பயன்முறையில் உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்ய விரும்பினால், இதற்கு நீங்கள் அருகிலுள்ள பான் வசதி மையத்திற்குச் சென்று ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.

நேரடியாக அருகில் உள்ள PAN மையம் சென்று திருத்தும் செய்யும் முறை

இந்தப் படிவம் 'புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் / பான் டேட்டாவில் மாற்றம் / திருத்தம்' (New PAN Card / Change / Correction in PAN Data) என்று அழைக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு எந்த சேவை தேவை என்பதைக் குறிப்பிட்டுச் சமர்ப்பித்த பிறகு உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்யப்படும். இது நீங்கள் நேரடியாகச் சென்று திருத்தத்தை மாற்றம் செய்யும் முறை. அருகில் உள்ள PAN சேவை மையத்தைக் கண்டறிய நீங்கள் கூகிள் மேப்ஸ் சென்று PAN Facilitation Center என்று டைப் செய்து சரியான விலாசத்தைப் பெறலாம்.

உங்கள் PAN கார்டு விபரங்களை ஆன்லைனில் திருத்தும் செய்வது எப்படி?

உங்கள் பான் கார்டை ஆன்லைன் மூலம் திருத்தும் செய்து மாற்றத்தை மேற்கொள்ள விரும்பினால், என்எஸ்டிஎல் சேவையான www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html அல்லது UTIITS சேவை UTIITSL சேவையை வழங்கும் myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp மூலம் நீங்கள் ஆன்லைன் வழியாக மாற்றத்தைச் செய்து முடிக்கலாம். தெரியாதவர்களுக்கு, இந்த இணையதள பக்கங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது மற்றும் பாதுகாப்பானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆன்லைன் பக்கத்தில் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ
  • இப்போது உங்களுக்குக் காண்பிக்கப்படும் பக்கத்தில் உள்ள Application Type பிரிவில் உள்ள Changes or Correction in existing PAN data என்ற விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
  • அருகில் உள்ள பிரிவில் இருந்து நீங்கள் தனி நபரா, வணிகரா அல்லது வேறு ஏதேனுமா என்பதை கொடுக்கப்படும் தேர்வில் இருந்து செலக்ட் செய்யுங்கள்.
  • பின்னர் உங்கள் முதல் பெயர் நடுப் பெயர் போன்ற விபரங்களைச் சரியாக உள்ளிடவும்.
  • அதற்குக் கீழ் உள்ள பெட்டிகளில் உங்களின் பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டை சரியாக உள்ளிடுங்கள்.

இறுதியாக இதை செய்ய மறக்காதீர்கள் 

அதனைத் தொடர்ந்து உங்களின் ஈமெயில் ஐடி, மொபைல் எண் மற்றும் உங்களுக்கு வழங்கப்பட்ட PAN அடையாள அட்டையின் எண் எழுத்துக்களை பதிவிடுங்கள்

நீங்கள் இந்தியக் குடிமகன் தான் என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அதற்கு கீழ் இருக்கும் செக் பாக்சில் டிக் செய்துகொள்ளுங்கள்.

இறுதியாக கேப்சா கோடை உள்ளிட்டு Submit கிளிக் செய்யுங்கள்

போன் மூலம் அழைத்து மாற்றத்தை மேற்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள் NSDL உடன் இணைக்கத் தேவைப்படும் 1800-180-1961 மற்றும் 020-27218080 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் மாற்றத்தை மேற்கொள்ளச் செயல்முறையைத் துவங்கலாம். இது தவிர, efilingwebmanager@incometax.gov.in மற்றும் tininfo@nsdl.co.in ஆகிய இந்த இரண்டு ஐடிகளிலும் உங்கள் மாற்றம் குறித்த தகவல்களை இணைத்து அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்களுடைய PAN அட்டையில் உள்ள தவறுகளை மாற்றம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக