
உலக நாடுகளில் வாழ்வதற்கான வாழ்க்கை செலவு மிகவும் அதிகமான நகரங்களில் இஸ்ரேல் நாட்டின் டெல் அவீவ் முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆய்வு வாழ்வதற்கான அடிப்படை செலவில் ஏற்படும் அடிப்படை மாற்றங்களை பிரதிபலிக்கிறது. 2021ல் உலகத்திலேயே முதல் காஸ்ட்லியான நகரம் என இஸ்ரேலின் டெல் அவீவ் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஐந்தாவது இடத்தில் இருந்த டெல் அவீவ் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது. இது கொரோனா காரணமாக சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனைகள், தடைகள், தட்டுப்பாடுகள், காரணமாக அதிகரித்த விலை வாசி, அன்னிய பணபரிமாற்ற விகிதம், அதன் நாணயத்தின் மதிப்பு 25 வருடங்களில் இல்லாத அளவு உச்சத்தினை எட்டியது உள்ளிட்ட பல காரணிகளும், நுகர்வோரின் வாழ்க்கை செலவினங்களை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
பிரான்சின் பாரீஸ் நகரம் இந்த ஆண்டில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இரண்டாவது இடத்தினை மற்றொரு நாடான சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது.
இதே சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சூரிச் நகரம் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா வழக்குகளுக்கு மத்தியில், கடுமையான கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருவதாக தெரிகின்றது.
ஹாங்காங் நகரம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இது அந்த நகரத்தில் ஆடைகள் மற்றும் பர்சனல் கேர் பொருட்களின் விலையானது குறைந்துள்ள நிலையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம் ஆறாவது இடத்திலும், ஜெனிவா ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் கோபன்ஹேகனும், ஒன்பதாவது இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும், 10வது இடத்தில் ஜப்பானின் ஓசாகாவும் இடம் பெற்றுள்ளன.
இதில் சிரியாவின் டமாஸ்கஸ் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் லிபியாவின் திரிப்பொலி
மூன்றாவது இடத்தில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்
4வது இடத்தில் துனிசியா நாட்டின் துனிஷ்
5வது இடத்தில் கஜகஸ்தானின் அல்மாட்டி
6வது இடத்தில் பாகிஸ்தானி கராச்சி
7வது இடத்தில் இந்தியாவின் அகமதாபாத்
8வது இடத்தில் அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ்
9வது இடத்தில் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ்
10வது இடத்தில் ஜாம்பியாவின் லுசாக்கா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக